டெல்லி டூ சென்னை விமானம்.. நடுவானில் அத்துமீறி அசிங்கமாக மாட்டிய பயணி.. மறக்க முடியாத பயணம்
சென்னை: டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த 37 வயது பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக சென்னை வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் மீது புகார் எழுந்துள்ளது. தெரியாமல் கைப்பட்டுவிட்டதாக சமாளித்த ராஜேஷ், மீண்டும் மீண்டும் சில்மிஷம் செய்தாராம். இதனால் அந்த பெண் நடுவானில் கூச்சலிட்டதால், இப்போது கம்பி எண்ணி வருகிறார்.
சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையமும், உள்நாட்டு விமான நிலையமும் ஒன்றாக அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன. சென்னைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல விமானங்கள் வந்து செல்கின்றன. அப்படித்தான் டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 164 பயணிகளுடன் சம்பவம் நடந்த அன்று வந்து கொண்டு இருந்தது.

தனியார் விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது அதில் பயணித்த சென்னை வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த 43 வயதாகும் ராஜேஷ் என்பவர் தனது இருக்கைக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த 37 வயது பெண் பயணியிடம் சில்மிஷம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தத.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் பயணி கூச்சலிட்டு, விமான பணிப்பெண்களிடம் புகார் தெரிவித்தார். அவர்கள் ராஜேசை அவர்கள் கடுமையாக எச்சரித்தனர். அதற்கு ராஜேஷ், தெரியாமல் கைபட்டு விட்டது என்று கூறி சமாளித்தாராம். ஆனால் அதன்பிறகும் ராஜேஷ் முன் இருக்கைக்குள் கையை விட்டு பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தலைமை விமானியிடம் விமான பணிப்பெண்கள் புகார் தெரிவித்தனர்.
உடனடியாக அவர், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு இதுபற்றி தகவல் கொடுத்தார். அந்த விமானம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரை இறங்கியதும், தயாராக இருந்த விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, பயணி ராஜேசை வளைத்து பிடித்தார்கள். பின்னர் அவரை பாதுகாப்பாக விமானத்தில் இருந்து கீழே இறக்கி, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்துக்கு அழைத்து சென்றார்கள். அங்கு பாதிக்கப்பட்ட பெண் பயணி, ராஜேஷ் மீது முறைப்படி எழுத்து மூலமாக புகார் செய்தார். இதையடுத்து அவரை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் ராஜேசை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விமானத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த புகாரில் சென்னை இளைஞர் கைதாகி இப்போது கம்பி எண்ணி வருகிறார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications