மொட்டை மாடியிலிருந்து வந்த அலறல்.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. தப்பி ஓடிய நித்யா
13 வயது சிறுமியின் கழுத்தை இளைஞர் ஒருவர் அறுத்துள்ளார்
சென்னை: மொட்டை மாடியில் இருந்து வந்த அலறலை கேட்டு பொதுமக்கள் அதிர்ந்துவிட்டனர்.. 13 வயது சிறுமியிடம் வேலையை காட்ட போய்.. அதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவிக்கவும், கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துவிட்டு இளைஞர் ஒருவர் தப்பி உள்ளார்!
Recommended Video
சென்னை அமைந்தகரை முத்துமாரி அம்மன் காலனி பகுதியில் வசித்து வரும் 8-ம்வகுப்பு படிக்கும் மாணவி அவர்.. வயது 13 ஆகிறது.. நேற்று ஸ்கூல் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவர் மொட்டை மாடிக்கு சென்றார்.

சிறிது நேரத்தில் அலறல் சத்தம் மொட்டை மாடியில் இருந்து தெறித்தது.. அதனால் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடி சென்று பார்த்தபோது, இளைஞர் ஒருவர் சிறுமியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொண்டிருந்தார். அந்த பெண்ணோ அவரிடமிருந்து தப்பிக்க போராடிக் கொண்டிருந்தார்.
இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அந்நபரை பிடிக்க முயன்றனர்.. ஆனால், அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்... கழுத்தில் ரத்தம் வடிந்தபடி துடித்துக்கொண்டிருந்த சிறுமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.. இப்போது தீவிரமாக சிகிச்சை நடந்து வருகிறது. இதுகுறித்து அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான் அந்த இளைஞர் அதே வீட்டின் கீழ்த்தளத்தில் வசித்து வரும் நித்யா என்பதும், அவருக்கு வயது 20 என்பதும் தெரியவந்தது.
13 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார் நித்யா.. இந்த காதலை சொல்ல நேற்று மொட்டை மாடிக்கு போயுள்ளார்.. சிறுமி அக்காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கவும், ஆத்திரமடைந்த நித்யா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்து இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கு வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.. ஆனால் நித்யா தலைமறைவாக இருப்பதால் தேடுதல் வேட்டை நடக்கிறது.. லவ் டார்ச்சர் செய்து சிறுமியை கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications