பட்டப்பகலில் காவல்நிலையம் எதிரே படுகொலை..துடி துடித்து இறந்த இளைஞர்..அலறிய அம்பத்தூர்
சென்னை: அம்பத்தூரில், காவல்நிலையம் எதிரே பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை தொடர்பாக 4 பேரை கைது செய்து, அம்பத்தூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Recommended Video
கொலை செய்யப்பட்ட இளைஞரின் பெயர் கார்த்திக் ராஜா என்பதாகும். இவர் சென்னை அம்பத்தூரில் உள்ள காமராஜ் பகுதியை சேர்ந்தவர். கூலி வேலை பார்க்கும் இவர் கடந்த 2 நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வீட்டிலேயே இருந்துள்ளார். இன்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில் அவரை பின் தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அம்பத்தூர் காவல்நிலையம் எதிரே கார்த்திக்கை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்றது. இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த கார்த்திக் துடி துடித்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து அம்பத்தூர் போலீசார் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து 4 பேரை கைது செய்துள்ளனர். கொலைசெய்யப்பட்ட கார்த்திக் மீது கொலை மற்றும் குற்றச்சம்பவங்கள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. கார்த்திக் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், பட்டப்பகலில் காவல்நிலையம் அருகே இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த சில மாதங்களாகவே பழிக்கு பழியாக செய்யப்படும் கொலைகள் அதிகரித்து வருகிறது. ரவுடிகள் தொழில் போட்டியால் கொல்லப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. ரவுடிகளை கண்காணித்து பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications