எடப்பாடி பழனிச்சாமி வேன் மீது செருப்பு வீசிய வாலிபரை சிறையில் அடைக்க மறுப்பு.. இப்போ எங்கேயுள்ளார்?
Recommended Video

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாகனம் மீது செருப்பு வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை சிறையில் அடைக்க முடியாத சூழ்நிலை எழுந்துள்ளது.
தஞ்சை லோக்சபா தொகுதியில் அதிமுக கூட்டணியிலுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் நடராஜனை ஆதரித்து ஒரத்தநாட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார்.
அப்போது திடீரென எங்கிருந்தோ பறந்து வந்தது ஒரு செருப்பு. அது, நல்லவேளையாக முதல்வர்மீது படவில்லை. ஆனால் உடன் நின்றிருந்த வைத்திலிங்கத்தின் கையில்பட்டு, வேன் மேலேயே விழுந்தது. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அடி விழுந்தது
கூடியிருந்த அதிமுகவினர் செருப்பு வீசிய நபரை வளைத்து பிடித்து சரமாரியாக தர்ம அடி கொடுத்துள்ளனர். இதைப் பார்த்த போலீசார், கூட்டத்தினரிடமிருந்து மீட்டு, அந்த வாலிபரை கைது செய்தனர்.

விசாரணை
போலீசார் விசாரணையில், உப்புண்டார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞரான வேல்முருகன் அவர் எனத் தெரியவந்தது. கேட்டரிங் படித்துள்ள வேல்முருகன், செருப்பு வீசும் நோக்கத்தில், அதிமுகவின் கரைவேட்டியை கட்டியபடி கூட்டத்தோடு கூட்டமாக கலந்து சென்றுள்ளார். இதில் வேல்முருகன், டிடிவி தினகரனின், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. முன்பு இவரது குடும்பம் அதிமுகவில் உறுப்பினராக இருந்துள்ளதாம்.

மனநிலை
இருப்பினும், இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அதற்கான சிகிச்சை ஆவணங்கள் உள்ளதாகவும், வேல்முருகன் குடும்பத்தார் போலீசில் தெரிவித்தனர். இதுகுறித்தும் போலீசார் விசாரித்த நிலையில், 15 நாட்கள் வேல்முருகனை ரிமாண்ட் செய்தனர் காவல்துறையினர். ஆனால் அங்குதான் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருப்பியனுப்பிய சிறை நிர்வாகம்
வேல்முருகனை பட்டுக்கோட்டை கிளை சிறையில் அடைக்க சென்ற போது மனநிலை பாதிக்கப்பட்டவரை சிறையில் அடைக்க முடியாது என்று சிறை நிர்வாகம் திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. எனவே, திருச்சியில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications