Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புற்றுநோயை வென்ற யூடியூபர்.. புல்லரிக்க வைக்கும் ரியல் ஸ்டோரி! யார் இவர்? பிழைத்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: புற்றுநோயிலிருந்து உயிர்பிழைப்பதே கஷ்டம் எனப் பலரும் நம்பிக் கொண்டிருக்கும் காலத்தில், அந்த நோயை வென்று புதிய பிறவி எடுத்து வந்துள்ளார் யூடியூபர் விஜய்.

தன்னம்பிக்கை ஸ்டோரிக்கு ஒரு தரமான உதாரணம் விஜய். அப்படி என்ன சாதித்துவிட்டார் என்கிறீர்களா? புற்றுநோய் தாக்கி 3 ஆவது அபாய கட்டத்திலிருந்த இவர் இன்று அதிலிருந்து மீண்டு மறுபிறவி எடுத்து வந்திருக்கிறார். "நான் கேன்சரை ஒரு வியாதியாகப் பார்க்கவில்லை. என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கிறேன்" என்கிறார் விஜய். யூடியூப் தளத்தில் அதிக புழக்கத்தில் இருக்கும் பலருக்கு இந்த சாரா, விஜய் தம்பதியை நன்றாகவே தெரியும். இவர்களின் சேனலை கிட்டத்தட்ட 1.3 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.

youtuber cancer

தனக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பிலிருந்து விஜய் முதலில் செய்த மருத்துவம் என்ன தெரியுமா? மன தைரியம். அவர் இறந்துவிடுவார் என்று மருத்துவர்கள் சொன்ன பிறகு, மனம் தளராமல் உயிர்பெற்றுக் காட்டுவேன் என்று வைராக்கியமாக அவர் மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொண்டார். ரோமங்கள் உதிர்ந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய விஜய் முகத்திலும் தலையிலும் கொத்து கொத்தாக ரோமங்கள் வளர்ந்து காடுபோல் செழிப்பாகத் தெரிகின்றன. அந்த வெறும் ரோமங்கள் அல்ல. அவ்வளவும் விஜய்யின் தன்னம்பிக்கைகள்.

எப்படி புற்றுநோய் தாக்கியது? இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை எப்படி அதிலிருந்து மீட்பது? நோயிலிருந்து மீண்டு வர என்ன செய்ய வேண்டும்? என்ற லட்சக் கணக்கான கேள்விகளுக்கு அவரே ஒவ்வொரு கட்டமாக முயன்று விடையைக் கண்டுபிடித்தார். அதை மூடி மறைத்து தனக்குள்ளாகவே வைத்துப் புதைத்துக் கொள்ளாமல், தன்னைப் போன்று தவிக்கும் நபருக்கு தைரியம் கொடுக்க முடிவு செய்தார். தனது புற்றுநோய் சிகிச்சை பற்றிய ஒவ்வொரு அப்டேட் செய்திகளையும் வீடியோவாக மாற்றி வெளியிட்டார். அதைக் கேட்ட பல அவரை வாழ்த்தினர். ஆச்சரியப்பட்டன. கூட நிற்பதாக வாக்குறுதி அளித்தனர். இன்றும் மறுபடியும் சேதாரம் அற்ற மனிதனாக நோயை வென்று காட்டி இருக்கிறார் விஜய்.

அவருக்கு என்ன நடந்தது? அவரே பேசுவதுதானே சரி, "சாராவுக்கும் எனக்கு 2015இல் கல்யாணமானது. ஒரே வருடத்தில் ஒரு மகள் பிறந்தாள். அதன்பின்னர் 7 வருடம் கழித்து லாக்டவுனில் ஒரு மகள் பிறந்தாள். குழந்தை பிறந்து 3 மாதம் கழித்து ஒரு மருத்துவ சோதனைப் போனபோது எனக்கு கேன்சர் என ரிப்போர்ட் வந்தது. 3ஆவது நிலையிலிருந்தேன். நான் உயிரோடு இருப்பேனா என்பது கேள்விக் குறியானது.

youtuber cancer

அப்போது வீட்டில் ஜாலியாக வீடியோ போட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், இந்த கேன்சர் வந்த பிறகு தோற்றம் மாற ஆரம்பித்தது. முடி கொட்டத் தொடங்கியது. மனைவி அதனால் வீடியோ போடுவதை நிறுத்திடலாம் என்றார். நான் தான் விடாப்பிடியாக நம் அனுபவத்தைப் பற்றி வீடியோ போடுவோம். அது பலருக்கு நம்பிக்கை அளிக்கும் என்று போட்டேன்.

அப்போது உடனே அறுவை சிகிச்சை என்று சொன்னார்கள். உடம்பில் 2 புற்றுநோய் கட்டிகள் இருந்தன. 3 மணிநேரம் அறுவை சிகிச்சைக்கு நேரம் குறித்து இருந்தார்கள். ஆனால், 8 மணிநேரம் நடந்தது. என் உடலில் 99% ரத்தத்தை வெளியேற்றிவிட்டு, புதிய ரத்தம் மாற்றிவிட்டார்கள். அதன்பின்னர் முதலில் கீமோதெரபி செய்தார்கள். புற்றுநோய்க்கு முதல் மருந்தே மன தைரியம்தான். நாம் நம்பிக்கையோடு எதிர்த்து போராட வேண்டும். அது மிகவும் முக்கியம்.

நான் 80 கிலோவுக்கு மேல் இருந்தேன். கீமோதெரபி போது 60 கிலோ ஆகிவிட்டேன். தலைமுதல் கால் வரை எங்கேயும் ஒரு முடி கூட இருக்காது. அப்படி இருந்தும் கீமோதெரபி பற்றி ஒவ்வொரு நிலை சிகிச்சை பற்றியும் வீடியோ போட ஆரம்பித்தேன். ஒவ்வொரு முறை கீமோதெரபியும் 8 மணிநேரம் நடக்கும். இரண்டு புற்று கட்டிகள் இருந்தன. ஒன்று அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விட்டார்கள். மற்றொன்றை அறுவை சிகிச்சை மூலம் எடுக்க முடியாது. கீமோதெரபி மூலம்தான் கரைக்கச் சிகிச்சை அளித்தார்கள். அதுகூட உத்தரவாதம் இல்லை. ஒரு முயற்சிதான். நல்லவேளையாக எனக்கு அந்தக் கட்டி கரைந்துவிட்டது. அதனால் பிழைத்தேன்" என்கிறார் விஜய்.

youtuber cancer

"கேன்சர் வந்தாலே இறந்துவிடுவார்கள் எனப் பலரும் நினைக்கிறார்கள். அப்படி அல்ல. அதிலிருந்து மீண்டு வர முடியும் என மக்களுக்குச் சொல்ல விரும்பினோம். ஒரு உதாரணமான தம்பதியாக உலகிற்கு இருக்கவேண்டும் என்று நினைத்தோம். அதனால் வாழ்க்கையில் உள்ள அத்தனை கஷ்டங்களையும் வீடியோவாக போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இப்போது வரை பலர் எங்களைத் தொடர்பு கொண்டு சிகிச்சைக்கு ஆலோசனை கேட்கிறார்கள். நான் அதை விரும்பி செய்கிறேன்" என்கிறார் இவரது மனைவி சாரா.

"கீமோதெரபி சிகிச்சை நடக்கும்போது முடி கொட்ட ஆரம்பித்துவிடும். சிகிச்சை முடிந்து நன்றாக ஆனால் மீண்டும் முடி வளர தொடங்கிவிடும். அப்படித்தான் விழுந்த முடி எல்லாம் மீண்டும் முளைக்கத் தொடங்கியது. என் பழைய நிலையைப் பார்த்தவர்கள், இன்று என்னைப் பார்க்கும்போது ஆச்சரியப்படுகிறார்கள்" என்கிறார் விஜய். உண்மையில் இவர் அசுரத்தனமான தைரியசாலிதான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+