கிராமங்களுக்கெல்லாம் போதை பொருள் பரவிவிட்டது! அண்ணாமலை வீடியோவை பகிர்ந்து! சோஹோ ஸ்ரீதர் வேம்பு பகீர்
சென்னை: தமிழ்நாட்டில் கிராமங்களுக்கு எல்லாம் போதை பொருள் பரவிவிட்டது என்று சோஹோ நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு புகார் வைத்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடியோவை பகிர்ந்து ஸ்ரீதர் வேம்பு புகார் வைத்துள்ளார்.
டெல்லியில் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் என்ற முன்னாள் திமுக நிர்வாகி சிக்கி உள்ளார். ஜாபர் சாதிக் என்பவர் சினிமா திரைப்பட தயாரிப்பாளராகவும், திமுக முன்னாள் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார்.

சலீம் என்பவரும் இதில் சிக்கி உள்ளார். சலீம் என்பவரும் அரசியல் பிரமுகராக இருந்து வருகிறார். மற்றொருவர் பெயர் மைதீன். இவர் திரைப்பட நடிகராக உள்ளார். குறிப்பாக இயக்குநர் அமீர் இயக்கி வரும் "இறைவன் மிகப் பெரியவன்" திரைப்படத்திலும் இவர் நடித்து இருக்கிறாராம். இவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றன.
இந்த விவகாரம் உச்சம் எடுத்த நிலையில் ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இவர் தற்போது தலைமறைவாக உள்ளார்.
அதன்படி மேற்கு டெல்லி பகுதியில் உள்ள பசாய் தாராபூர் பகுதியின் குடோன் ஒன்றில் இருந்து இந்த மாஃபியா செயல்பட்டு வருவது தெரியவந்தது. இந்த போதை பொருள் வழக்கில்தான் சாதிக் தேடப்பட்டு வருகிறார். அந்த குடோனில் இருந்து 50 கிலோ போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.2,000 கோடி மதிப்பு உள்ள பொருட்கள் இங்கிருந்து கைப்பற்றப்பட்டன.
அண்ணாமலை; பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தீர்க்க திமுக தவறிவிட்டதாகவும், இப்போது "கட்சியின் உறுப்பினர்" சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் ராஜாவாகக் கண்டறியப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டில் போதை பொருட்கள் பரவ முக்கிய காரணமாக திமுக மாறி உள்ளது. தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறையவும் இந்த போதை பொருள் பழக்கமே காரணம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

சோஹோ; அண்ணாமலையின் இந்த வீடியோவை பகிர்ந்து தமிழ்நாட்டில் கிராமங்களுக்கு எல்லாம் போதை பொருள் பரவிவிட்டது என்று சோஹோ நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு புகார் வைத்துள்ளார்.
அதில், தமிழ்நாட்டில் நான் வசிக்கும் இடம் போன்ற தொலைதூர கிராமங்களுக்கு கூட போதைப்பொருள் வந்துள்ளது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். எங்கள் பள்ளிக் குழந்தைகளை போதையில் இருந்து காப்பாற்ற போராடி வருகிறோம்.
I can confirm that narcotic drugs have arrived in remote villages like where I live in Tamil Nadu. We are struggling to keep our school kids off drugs.
— Sridhar Vembu (@svembu) February 29, 2024
What Annamalai-ji has discussed here goes well beyond politics. We have to deal with this issue resolutely.
Singapore and… https://t.co/dsFj0pL5D9
இங்கு அண்ணாமலை பேசியது அரசியலுக்கு அப்பாற்பட்டது. இந்தப் பிரச்சினையை நாம் உறுதியாகக் கையாள வேண்டும்.
சிங்கப்பூரும் மலேசியாவும் மிகவும் வலுவான போதைப்பொருள் எதிர்ப்புக் கொள்கைகளைக் கொண்டுள்ளன, அவற்றை நாம் பின்பற்ற வேண்டும். அதேபோன்ற விதிமுறைகளை நாம் கொண்டு வர வேண்டும்.
மதுரை சம்பவம்: இந்த நிலையில்தான் மதுரையில் 30 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சிலமன் பிரகாஷ் என்பவரிடம் இருந்து 30 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை மதுரை ரயில் நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications