கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குறைவான பாதிப்பு.. அதிக டிஸ்சார்ஜ்.. சரியான பாதையில் கோவை.. ஒரே நாளில் 23 பேர் குணமாகினர்!

Google Oneindia Tamil News

கோவை: கோவை ஈஎஸ்ஐ மருத்துவனையில் சிசிக்சை பெற்று வந்த கொரோனா வைரஸ் நோயாளிகளில் 23 பேர் வெற்றிகரமாக முழுமையாக குணமடைந்தால் மருத்துவமனையில் இருந்து சனிக்கிழமை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Recommended Video

    தமிழகத்தில் வேகமாக குறையும் கொரோனா... என்ன காரணம்?

    தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள 2 வது மாவட்டமான கோவை, சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகத் தெரிகிறது, குறைவான பாதிப்பு மற்றும் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் குணப்படுத்துதல் போன்றவை நடந்து வருகிறது.

    இதுபற்றி கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கூறுகையில். "கோவையில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக கோவையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது இங்கு கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூரைச் சேர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட 250 பேரும், ஈரோடில் இருந்து ஒரு சிலரும் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கமல்.. ஹெச் ராஜா.. ஸ்ரீபிரியா டுவிட்டரில் வாய் சண்டை.. ஹெச் ராஜாவுக்கு ஸ்ரீ பிரியா கொடுத்த பதிலடிகமல்.. ஹெச் ராஜா.. ஸ்ரீபிரியா டுவிட்டரில் வாய் சண்டை.. ஹெச் ராஜாவுக்கு ஸ்ரீ பிரியா கொடுத்த பதிலடி

    10 பேர் கோவை

    10 பேர் கோவை

    நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 23 நோயாளிகளில் 10 பேர் கோவை, 9 பேர் திருப்பூரைச் சேர்ந்தவர்கள், 4 பேர் நீலகிரியைச் சேர்ந்தவர்கள் ஆவர்"மீதமுள்ள நோயாளிகள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம். வெளியேற்றப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தவும், அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்ட பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    3 பேருக்கே கொரோனா

    3 பேருக்கே கொரோனா

    கடந்த மூன்று நாட்களில் கோவையில் பரிசோதிக்கப்பட்ட 2,225 பேரில், 3 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது, எனவே மாவட்ட அதிகாரிகள் விரைவில் இந்த கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்" இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்தார்..

    குணமானவர் விருப்பம்

    குணமானவர் விருப்பம்

    இதற்கிடையில், இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட திருப்பூரைச் சேர்ந்த ஒருவர், மாநில அரசு விரைவில் தொடங்க வாய்ப்புள்ள பிளாஸ்மா பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்து தன்னார்வத் தொண்டு செய்ய விரும்புகிறேன் என்று கூறினார்.அப்துல் வஹாப் அன்வர் என்பவர் இதுபற்றி கூறுகையில், "எனது பிளாஸ்மா சில சோதனைகளுக்காக கேட்கப்பட்டுள்ளன, இந்த வைரஸுக்கு சிகிச்சையளிக்க அரசாங்கம் கேட்டால் எனது இரத்தத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்றார். தப்லிகி ஜமாஅத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மார்ச் 23 அன்று டெல்லியில் இருந்து திரும்பிய அன்வர், மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இப்போது குணம் அடைந்து அவர் வீடு திரும்பி உள்ளார்.

    மத்திய அரசு பாராட்டு

    மத்திய அரசு பாராட்டு

    இதனிடையே தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 82 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் இதுவரை சிகிச்சை முடிந்து 365 பேர் அரசு மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். இந்திய அளவில் அதிக பரிசோதனை மையங்கள், குணமடைந்து வீடு திரும்புவர்களின் எண்ணிக்கையில் முன்னணியல் உள்ள மாநிலம், மிக குறைவான இறப்பு விகிதம் உள்ள மாநிலமாகவும் தமிழகம் விளங்குவதாக மத்திய அரசு பாராட்டி உள்ளது.

    விஜயபாஸ்கர் தகவல்

    விஜயபாஸ்கர் தகவல்

    இதற்கிடையே பிளாஸ்மா சிகிச்சைக்கு தமிழகம் தயாராகி வருகிறது.சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பிளாஸ்மா சிகிச்சைக்கு தயாராக உள்ளார்கள். இந்த சிகிச்சையை மேற்கொள்ள 2வகையான ஒப்புதலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் பெற வேண்டி உள்ளது. இது ஒரு ஒப்புதல் கிடைத்துள்ளது. மற்றொரு ஒப்பதலுக்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.அது கிடைத்தவுடன் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கும் என்று ககாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பேட்டியின் போது தெரிவித்தார்.

    English summary
    23 Coronavirus patients discharged on Saturday from coimabtore ESI Hospital, 10 are from Coimbatore, 9 from Tirupur, and 4 from Nilgiri.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X