உக்கடம் மேம்பாலத்தில் இளைஞரின் கழுத்து, கைகளைப் பதம் பார்த்த மாஞ்சா நூல்.. 3 பேர் மீது வழக்குப் பதிவு
கோவை: கோவை மாவட்டம், உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரின் கழுத்தில் பட்டம்விட பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல் அறுத்த விவகாரத்தில் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பட்டம் விடுவதற்கு சிறுவர்கள், இளைஞர்கள் மாஞ்சா நூலைப் பயன்படுத்துவது வழக்கம். இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அறுக்கும் தன்மையுடையது என்பதால் இந்த நூலைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மிகவும் பதமாக இருக்கும் இந்த நூல் அறுத்தால் கடுமையான ஆழமான காயங்களை உண்டாக்கும். இந்த மாஞ்சா நூலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர். எனவே, இந்த மாஞ்சா நூலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரின் கழுத்தில் பட்டம்விட பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல் அறுத்த விவகாரத்தில் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக். இவரும், இவரது மனைவியும் உக்கடம், ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்தப் பாலத்தில் பட்டம் ஒன்று பறந்து வந்து பட்டத்தின் நூல் கார்த்திக்கின் கழுத்தில் சுற்றிக் கொண்டுள்ளது. அப்போது, நிலை தடுமாறிய கார்த்தி உடனடியாக வாகனத்தை நிறுத்தி பட்டத்தின் நூலை எடுக்க முயன்றுள்ளார்.
அந்தப் பட்டத்தில் மாஞ்சா நூல் பயன்படுத்தப்பட்டிருந்ததால் பட்டத்தின் கழுத்து மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளார் கார்த்திக். அவருக்கு விரல்களில் இரண்டு இடங்களில் தையல் போடப்பட்டுள்ளது காவல் துறை உதவி எண் 100க்கு அழைத்து இதுதடொர்பாக தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, கார்த்திக் கடந்த திங்கள்கிழமை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்திருந்தார்.
இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கரும்புக் கடை பகுதியைச் சேர்ந்த ரியாஸ், அசிம் பைசல் மற்றும் அப்துல் ஹமீது ஆகியோர் பட்டம் விட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, ஆபத்து குறித்தும் தெரிந்தே மற்றவர்களுக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் கரும்புக்கடை காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
காவல் துறையினர் சாப்ரில் மூன்று இளைஞர்களுக்கும் போலீஸார் கடுமையான எச்சரிக்கை விடுத்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட மூவரும் காவல் நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications