அதிமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன்?... பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் விளக்கம்
கோவை: அதிமுகவின் ஓராண்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் தான் அக்கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதாக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் கூறியுள்ளார்.
பாஜக இளைஞரணி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கோவை சென்ற அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் , தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பாஜக தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.

பாஜக வேட்பாளர்கள் 24, 25-ம் தேதிகளில் அறிவிக்கப்படுவார்கள் என்று கூறினார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை புகாரில், அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
பாஜக தலைவர் அமித் ஷா ஓராண்டுக்கு முன் அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சித்ததாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ஓராண்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தார் .
மேலும், மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேர்தலை தள்ளிவைக்க கேட்டு கொண்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் முரளிதரராவ் கூறினார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங்












Click it and Unblock the Notifications