உனக்கு 37, எனக்கு 57.. கோவையில் ஓடிப்போன 3வது மனைவி... 4வது காதலியும் ட்விஸ்ட்.. டிரைவர் வாக்குமூலம்
கோவை: கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் லாரி உரிமையாளர் பிரேம் ஆனந்துக்கு 3 பெண்களை திருமணம் செய்துள்ளார். முதல் மனைவி உயிருடன் இல்லை..இரண்டாவது மனைவி விவாகரத்து வாங்கிவிட்டார். 3வது மனைவி வேறு ஒருவருடன் ஓடிப்போய்விட்டார். நான்காவதாக ஒரு பெண்ணுடன் பழகி திருமணம் வரை வந்துள்ளார். ஆனால் அந்த பெண் ஓட்டல் அதிபருடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். இதனால் லாரி உரிமையாளர் எடுத்த முடிவு ஆடிப்போக வைத்துள்ளது. கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக லாரி உரிமையாளர் பிரேம் ஆனந்த் அளித்த வாக்குமூலம் பற்றி பார்ப்போம்.
திருமணத்தை மீறிய உறவு சமூகத்தில் அதிகமாகிவிட்டது. ஒரு ஆண் திருமணத்தை மீறி வேறு பெண்ணை விரும்புவது, ஒரு பெண் வேறு ஆணை திருமண பந்தத்தை தாண்டி விரும்புவது பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. பல பிரச்சனைகளுக்கு கள்ளக்காதல் காரணமாக இருக்கிறது . திருமணத்தை மீறிய உறவால் இன்று ஒரு ஓட்டல் அதிபர் உயிருடன் இல்லை.. அவரை இல்லாமல் செய்த கோவை சூலூர் லாரி உரிமையாளர் கம்பி எண்ணுகிறார்.என்ன நடந்தது என்று பார்ப்போம்.

கோவை சூலூர் கள்ளக்காதல்
கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் திலீபன் என்ற ஓட்டல் அதிபர் அண்மையில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக லாரி உரிமையாளரான 58 வயதாகும் பிரேம் ஆனந்த் என்பவரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அவரிடம் கொலை தொடர்பாக போலீசார் விசாரித்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறுகையில்,
3வது திருமணம்
எனக்கு ஏற்கனவே 3 திருமணம் நடந்துள்ளது. இதில் எனது முதல் மனைவி இறந்து விட்டார். அவர் இறந்த பின்பு 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தேன். ஆனால் அவர் என்னிடம் விவாகரத்து பெற்று சென்று விட்டார். அதன்பின்னர் 3-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருடன் குடும்பம் நடத்தி வந்தேன். ஆனால் அவரும் சில மாதங்களிலேயே வேறொரு நபருடன் ஓடிப்போய்விட்டார்.
இதனால் தனியாக வசித்து வந்தேன். அப்போது எனது வீட்டின் அருகே இருந்த 37 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தோம். அவரை நான் 4-வதாக திருமணம் செய்ய நினைத்தேன். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். மேலும் கடந்த 3 மாதத்துக்கு முன்பு அவர் அந்த பகுதியில் உள்ள திலீபனின் ஓட்டலில் வேலைக்கு சேர்ந்திருந்தார்.
பிடிக்கவில்லை
ஆனால் திலீபனின் ஓட்டலில் என் காதலி வேலை செய்வது எனக்கு பிடிக்கவில்லை. நான் அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறினேன். ஆனால் அவர் அதனை கேட்கவில்லை. தொடர்ந்து வேலைக்கு சென்று வந்தார். அத்துடன் ஓட்டல் உரிமையாளரான திலீபனுடன், அந்த பெண் கள்ளக்காதல் வைத்திருந்ததும் எனக்கு ஒரு கட்டத்தில் தெரியவந்தது. என்னை விட்டு விட்டு, அவருடன் சென்றது எனக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. இதனால் கடந்த ஜனவரி மாதம் 4-ந் தேதி நான் அந்த பெண்ணை கொலை செய்வதற்காக அவர் வேலை பார்த்து வரும் ஓட்டலுக்கு சென்றேன். அப்போது அவரிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை கத்தியால் குத்தினேன். அதனை தடுக்க முயன்ற திலீபனையும் கத்தியால் குத்தினேன்.
17 நாளில் வெளியே வந்தேன்
இதனால் என்னை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். 17 நாட்கள் ஜெயிலில் இருந்து விட்டு சில நாட்களுக்கு முன்பு நான் வெளியில் வந்தேன். வெளியில் வந்த பின்னர், ஓட்டல் அருகே இருப்பவர்களிடம் அந்த பெண் குறித்தும், திலீபன் குறித்தும் விசாரித்தேன். அப்போது அவர்கள் 2 பேரும் ஒன்றாக ஊர் சுற்றுவது எனக்கு தெரியவந்தது. நான் 4-வதாக திருமணம் செய்ய இருந்த பெண்ணை திலீபன் அபகரித்துவிட்டதாக நினைத்தேன்.
படுக்கை அறையில் யார் அது
இதற்காக அவரை கொலை செய்ய திட்டம் தீட்டி விட்டு நேற்று அதிகாலை அவரது வீட்டிற்கு சென்று கதவை தட்டினேன். அந்த பெண்ணும் கதவை திறந்து வெளியில் வந்தார். அப்போது வீட்டிற்குள் திலீபன் கட்டிலில் படுத்திருந்தார். இது எனக்கு ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. இதனால் நான் அங்கிருந்த கத்தியை எடுத்து கட்டிலில் படுத்திருந்த திலீபனை சரமாரியாக குத்தினேன். மேலும் அவரது கழுத்தையும் அறுத்து கொலை செய்தேன். இதில் அவர் உயிரிழந்து விட்டார்.
போலீசில் சிக்கினேன்
அந்த பெண் அதனை தடுக்க முயன்றதால் அவரை கத்தியால் குத்தினேன். இதில் அவரும் காயம் அடைந்தார். எனக்கு கிடைக்காத காதலி யாருக்கும் கிடைக்க கூடாது என நினைத்த நான் அந்த பெண்ணுடன் ஒன்றாக சாகலாம் என முடிவு செய்தேன். அதற்காக வீட்டின் சமையல் அறையில் இருந்த கேஸ் சிலிண்டரை எடுத்து வந்து கேஸை திறந்து விட்டு தீயை பற்ற வைத்து சாக முயன்றேன். ஆனால் தீ எரிவதை பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் நான் போலீசாரிடம் சிக்கி கொண்டேன்" இவ்வாறு லாரி உரிமையாளர் பிரேம் ஆனந்த் கூறினார்.
முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications