”அண்ணா அடிக்காதீங்க” இளம்பெண் கதறல்.. 9 பேரும் குற்றவாளிகள்! பொள்ளாச்சி வழக்கு: இதுவரை நடந்தது என்ன?
கோவை: தமிழகம் மட்டும் இன்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் டைம்லைனை இங்கே பார்க்கலாம்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை கடத்திச் சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வெளியான வீடியோவில், ”அண்ணா அடிக்காதீங்க என இளம்பெண் கதறும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடனடியாக மூன்று பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

கல்லூரிகளில் போராட்டம்
வழக்குப்பதிவு செய்யும் போதே குறிப்பிட்ட வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வீடியோக்களில் பெண்கள் சித்ரவதை செய்யப்பட்ட காட்சிகளும் இடம் பெற்று இருந்தது பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. மனித சங்கிலி போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டம் நடைபெற்றது. அனைத்து கல்லூரிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து, 2020 ஆம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படது
9 பேர் கைது
இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களில் முக்கியமான நபரான திருநாவுக்கரசர் செல்போன் தான் வழக்கின் மிக முக்கியமான ஆதாரமாக இருந்தது. அவரது ஐபோனில் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இருந்தன. அதாவது பாதிக்கப்பட்ட பெண்களை கூட்டு பலாத்காரம் செய்தது, பெண்களை மிரட்டியது. அவர்களை ஆபாசமாக படம் எடுத்தது என நூற்றுக்கணக்கான வீடியோக்கள் அவரது செல்போனில் இருந்தது. இதுதான் இந்த வழக்கில் முக்கியமான ஆதாரமாக சிபிஐ எடுத்தது.
20 பெண்களுக்கு கவுன்சிலிங்
செல்போனை கைப்பற்றி வீடியோவில் இருந்த பெண்களை தொடர்பு கொண்டு விசராணை மேற்கொண்டனர். கிட்டதட்ட 20 பெண்களை சிபிஐ அடையாளம் கண்டு அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தது. அப்போது இந்த வழக்கில் திடுக்கிட வைக்கும் உண்மைகள் வெளி வந்தது.அதன்பிறகுதான் சபரிராஜன் என்பவர் இரண்டவது குற்றம் சாட்டப்பட்ட நபராக சேர்க்கப்பட்ட நபரின் லேப்டாப்பில் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது லேப்டாப்பிலும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இருந்தன. இந்தவீடியோக்களை பார்த்து போலீசாரே அதிர்ச்சி அடையும் அளவுக்கு ஆதாரங்கள் சிக்கின.
திருநாவுக்கரசின் பண்ணை வீடு
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அனைத்துமே நடந்தது ஆனைமலையில் உள்ள சின்னப்பாளையம் என்ற இடத்தில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் இந்த சம்பவம் நடைபெற்றது. அறிவியல்பூர்வமாகவும் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. அதாவது, வீடியோ எடுக்கப்பட்ட நேரம், இடம் ஆகிய தகவல்கள் ஐபோனில் உள்ளன. இது மிக முக்கியமான ஆதாரமாக இருந்தது.
பொள்ளாச்சி அட்டாக் பாய்ஸ் எனற பெயரில் வாட்ஸ் அப் குழு வைத்துள்ளனர். திருநாவுக்கரசும், சபரிராஜனும் ஏதாவது ஒரு பெண்ணை டார்கெட் செய்தால் அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறுவது, காதல் வலை வீசுவது, பிறந்தாள் கொண்டாட வீட்டுக்கு அழைப்பது என வலைவிரித்து அவர்களை சிக்க வைத்துள்ளனர். வீட்டிற்கு அழைத்து சென்ற பிறகு அவர்கள் கோரமுகத்தை காட்டியுள்ளனர். வீட்டிற்கு அழைத்து சென்று சித்ரவதை செய்வது,. சில வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மிரட்டியுள்ளனர்.
1500 பக்க குற்றப்பத்திரிக்கை
இந்த கொடூர வழக்கில் 1,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. இந்த விசாரணை அனைத்துமே மிக ரகசியமாக நடைபெற்றது. பாதிக்கபட்ட பெண்களின் அடையாளம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதால் கண்ணியமாகவும் கவனமாகவும் இந்த் வழக்கை சிபிஐ விசரித்தது.
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த போது, தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி நடைபெற்று வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் அருள் என்பவர் அதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகளோடு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும் இதை தீவிரமாக கையில் எடுத்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கு கூட இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி, 9 பேரும் குற்றவாளிகள் என உத்தரவிட்டார்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications