Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை அப்படியே மிளிருதே.. நேரில் ரெய்டு விட்ட ஸ்டாலின்.. உடனே போடப்படும் சாலைகள்.. சூப்பர்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: சென்னையில் சாலை பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் தற்போது கோவைக்கு உள்ளேயும் மாநகராட்சி சாலை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இதை முதல்வர் ஸ்டாலினும் நேரடியாக ஆய்வு செய்துள்ளார்.

தமிழ்நாடு முழுக்க பல்வேறு காரணங்களுக்காகக் சாலை பணிகள் நடந்து வருகின்றன. சாலைகளை விரிவு செய்வது, பாதாள சாக்கடை அமைப்பது, கழிவு நீர் குழாய்களை அமைப்பது, கேபிள் அமைப்பது, மழை நீர் வடிகால் சென்னையில் அமைப்பது, மின்சார வடங்களை அமைப்பது, பாலம் கட்டுவது, சென்னையில் செய்வது என்று பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

After Chennai, Now Coimbatore roads are revamped in fast phase after CM Stalin visit

இந்த பணிகள் அனைத்தையும் இந்த மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இத்தர்காண் உத்தரவு தமிழ்நாடு அரசு மூலம் ஒப்பந்ததாரர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களுக்கும் இந்த உத்தரவு சென்றுள்ளது.

இதனால் கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் உட்பட தமிழ்நாடு முழுக்க நடக்கும் சாலை பணிகள் விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆய்வு: இந்த நிலையில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்:8, துளசி நகரில் ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் 2.04 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியினையும், வார்டு எண்: 5, நஞ்சப்பா நகரில் உள்ள வி.கே.வி நகரில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 2.21 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளின் முன்னேற்றம் குறித்து வாரந்தோறும் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தி, பணி முன்னேற்றம் குறித்த அறிக்கையினை அளிக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 19.9.2023 அன்று தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பேசும் போது, மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் வாரியப் பணிகள், மின்வாரியப் பணிகள் என பல்வேறு பணிகள் காரணமாக மட்டுமல்லாமல், பொதுவாக பழைய சாலைகளின் நிலை போதிய பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள், இந்த நிலை மாற்றப்படவேண்டும் என்றும், நம் மாநில சாலைகள் தரமானதாக, மக்கள் பாராட்டப்படும் வகையில் அமைக்கப்படவேண்டும் என்றும் அன்றைய ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தினார்.

மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், அரசு செயலாளர்களும், துறைத் தலைவர்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும், இதனை கள ஆய்வு செய்தும், பணி முன்னேற்றம் கூட்டங்கள் நடத்தியும் உறுதி செய்ய திட்டமிட்டவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், சுற்றுப்பயணம் செய்ய அனைத்து மாவட்டங்களிலும், இது தொடர்பாக நேரடியாக ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பதாகவும், சாலைப்பணிகள் மேற்கொள்ளும் துறைகள் அனைத்தும் துரிதமாக, தரமாக பணிகளை மேற்கொண்டு முடிக்கவேண்டும் என்றும் கண்டிப்போடு தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 21.09.2023 அன்று சென்னை, மாநகரில் சாலைப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து இன்று, கோயம்புத்தூர் மாநகராட்சியின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் விவரங்கள் பின்வருமாறு:

கோயம்புத்தூர் மாநகராட்சி வார்டு எண் 8, துளசி நகர் சாலைப் பணி
மாநகராட்சி வார்டு எண்:8, துளசி நகரில் 2023-24-ஆம் ஆண்டிற்கான மாநில நிதி குழு நிதியின் கீழ் ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் 2.04 கி.மீ நீளத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டு வரும் பணியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இப்பணிகள் கடந்த 05.09.2023 அன்று தொடங்கப்பட்டு நிறைவுறும் தருவாயில் உள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சி வார்டு எண் 5, நஞ்சப்பா நகர் சாலைப் பணி
அதனைத் தொடர்ந்து, மாநில நிதி குழு நிதியின் கீழ் வார்டு எண்: 5, நஞ்சப்பா நகரில் உள்ள வி.கே.வி நகரில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 2.21 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வி.கே.வி. நகரில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்ததோடு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கியதற்கும் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

சாலைப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அனைத்து பணிகளையும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தாமதப்படுத்தாமல் முடிக்கப்பட வேண்டும் என்றும், நகராட்சி நிர்வாகத் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள், போக்குவரத்து காவல்துறை, மின்வாரியம், குடிநீர் வழங்கல் வாரியம், தொலைதொடர்புத் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, சாலைப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் .கல்பனா ஆனந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+