அதிக தொகுதிகளில் பாஜக நிச்சயமாக போட்டியிடும்.. டெல்லி தலைமை முடிவு என்ன? வானதி சீனிவாசன் அப்டேட்!
கோவை: கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக போட்டியிட்டதை விடவும், இந்த தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று அக்கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - பாஜக கூட்டணியின் தலைவர்கள் முடிவு எடுப்பார்கள் என்று கூறிய வானதி சீனிவாசன், எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று பாஜக தலைமை சொல்கிறதோ அங்கு களமிறங்குவேன் என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக - பாஜக இடையிலான தொகுதி பங்கீடு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனென்றால் பாஜகவை 25 தொகுதிகளுக்குள் நிறுத்தினால், எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய சாதகமாக அமையும். ஒருவேளை பாஜக 40 தொகுதிகளில் போட்டியிட்டால், அது அதிமுகவுக்கு பின்னடைவாக உருவாகும்.

பாஜக எதிர்பார்ப்பு
இதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித்ஷாவின் முடிவு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த தேர்தலில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 4 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. அதேபோல் இம்முறை கொங்கு மண்டலத்தில் பாஜக அதிக தொகுதிகளை எதிர்பார்க்கிறது. சேலம், தர்மபுரி, கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு தொகுதியை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
வானதி சீனிவாசன் பேட்டி
அதேபோல் கடந்த தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வானதி சீனிவாசன் பாஜக எம்எல்ஏ-வாகினார். ஆனால் இம்முறை வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதிக்கு மாறப் போவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாஜக தேர்தலுக்காக மட்டும் மக்களுக்கு சேவை செய்யும் கட்சி அல்ல.
அதிக தொகுதிகளில் பாஜக
தேர்தல் நேரத்தில் கூடுதலாக வேலை செய்கிறோம். ஆண்டு முழுக்கவே மக்களுக்காக சேவை செய்து வருகிறோம். இந்த முறை கடந்த தேர்தலை விடவும் அதிக தொகுதிகளில் பாஜக போட்டியிடும். எத்தனைத் தொகுதிகள் என்பதை பாஜக தலைமையும், அதிமுக தலைமையும் முடிவு செய்வார்கள். அதேபோல் என்டிஏ கூட்டணியில் இன்னும் ஏராளமான கட்சிகள் இணையும்.
சகோதரர் அண்ணாமலை
நான் எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்று தேசிய தலைமைத் தான் முடிவு செய்யும். அதேபோல் தேசிய மகளிர் அணி தலைவராக தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களுக்கும் பயணித்து வருகிறேன். மேலும், ஒரு சகோதரியாக அண்ணாமலை தேர்தலில் போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
-
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா -
எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்.. சிவி சண்முகத்தை அடுத்து சி. விஜயபாஸ்கரும் பரபர ட்வீட் பதிவு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா?












Click it and Unblock the Notifications