தேர்தலுக்கு முன்பே அதிமுக வசமாகும் கோவையின் 2 தொகுதிகள்? பரிதாப நிலையில் காங்கிரஸ்.. என்ன நடக்கிறது?
கோவை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கோவை மாவட்டத்தில் 2 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் இரு தொகுதிகளிலும் களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளர்கள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ராகுல் காந்தி உள்பட தேசிய, மாநில தலைவர்கள் பிரசாரம் செய்ய செல்லாத நிலையில் இரு வேட்பாளர்களும் பரிதவித்து வருகின்றனர். இதனால் தேர்தலுக்கு முன்பாகவே காங்கிரஸ் போட்டியிடும் இரு தொகுதிகளிலும் அந்த கட்சி தோல்வியை ஒப்புக்கொள்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்து.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் கோவை மாவட்டத்தில் சூலூர், கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் சிங்காநல்லூர் சட்டசபை தொகுதியின் வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் ஸ்ரீநிதி என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார். அதேபோல் கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியின் வேட்பாளராக சூர்யபிரகாஷ் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வீக்காக இருக்கும் காங்கிரஸ்
காங்கிரஸ் போட்டியிடும் இந்த 2 தொகுதிகளிலும் தற்போது அதிமுக வசம் உள்ளது. சிங்காநல்லூர் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் கேஆர் ஜெயராம் மீண்டும் போட்டியிட்டுள்ளார். அவரை காங்கிரஸ் சார்பில் ஸ்ரீநிதி எதிர்க்கிறார்.
அதேபோல் கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக அதிமுகவின் அருண்குமார் உள்ளார். இவர் மீண்டும் களமிறங்கி உள்ள நிலையில் அங்கு காங்கிரஸ் சார்பில் சூர்யபிரகாஷ் போட்டியிட்டுள்ளார். இந்த 2 தொகுதிகளிலும் அதிமுக பலமாக உள்ளது. காங்கிரஸ் வீக்காக இருக்கிறது. திமுக உள்பட பிற கூட்டணி கட்சிகள் ஆதரவளித்தால் தான் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியும்.
தேசிய - மாநில தலைவர்கள் புறக்கணிப்பு
இதற்கிடையே தற்போது தேர்தல் நெருங்கிவிட்டது. இன்னும் 10 நாட்களில் பிரசாரம் முழுவதுமாக முடிவடைந்துவிடும். ஆனால் தற்போது வரை 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரத்தை முன்னெடுப்பதில் தடுமாறி வருகிறது. காங்கிரஸ் மேலிட தலைவர்கள், தமிழகத்தை சேர்ந்த பெரிய பெரிய காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பிரசாரம் செய்யவில்லை. அவர்கள் யாரும் பிரசாரத்தில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி
குறிப்பாக ராகுல் காந்தி கேரளாவில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு கடந்த 6ம் தேதி கோவை விமான நிலையம் வழியாக டெல்லி புறப்பட்டார். அப்போது ராகுல் காந்தி கோவையில் பிரசாரம் அல்லது ரோடுஷோ செய்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. சிங்காநல்லூர் வேட்பாளர் ஸ்ரீநிதி மற்றும் கவுண்டம்பாளையம் வேட்பாளர் சூர்யபிரகாஷ் மற்றும் சில உள்ளூர் நிர்வாகிகளை மட்டும் சந்தித்தார். அப்போது வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி ஒற்றுமையாக செயல்படும்படி கூறி சென்றார்.
சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாரும் இன்று வரை தமிழகத்தில் பிரசாரம் செய்யவில்லை. இதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியில் நிலவும் உள்கட்சி பிரச்சனை, குளறுபடி தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்த பிரச்சனைகளால் ராகுல் காந்தி கடும் அதிருப்தியில் உள்ளதால் தான் பிரசாரத்துக்கு இன்னும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
உள்ளூர் நிர்வாகிகள் அதிருப்தி
இதுபற்றி கோவையை சேர்ந்த காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ''இரு தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வில் உள்ளூர் காங்கிரஸ் தொண்டர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கிறோம் என்று மாவட்டத்திலும், மாநிலத்திலும் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். இது ஏற்க முடியாது. இதனால் 2 வேட்பாளர்களின் தேர்விலும் கோவை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு திருப்தி இல்லை. இதனால் பலரும் தேர்தல் பணிகளில் ஈடுபட தயாராக இல்லை'' என்று கூறியுள்ளாார்.
தேர்தலுக்கு முன்பாகவே தோல்வி?
இதனால் சிங்காநல்லூர் தொகுதியில் வேட்பாளர் ஸ்ரீநிதியும், கவுண்டம் பாளையம் தொகுதியில் வேட்பாளர் சூர்யபிரகாசும் நேரடி களப்பணிகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் கட்டமைப்பு இல்லாதது பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் திமுக உள்பட பிற கூட்டணி கட்சி நிர்வாகிகளின் உதவியை நாட வேண்டும். அப்போது தான் இருவரும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இதனால் 2 தொகுதிகளில் களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதனால் தேர்தலுக்கு முன்பாகவே 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி அதிமுகவிடம் தோல்வியை ஒப்புக்கொள்ள தயாராகிவிட்டது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
-
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
டோண்ட் வொரி.. உங்களுடன் இருப்பேன்.. விஜய்க்கு போனை போட்ட ராகுல்? உண்மையில் அப்படி என்ன நடந்தது? -
தூக்கியடிக்கப்படும் செல்வப்பெருந்தகை.. ராகுல் காந்தி பெரிய முடிவு? கையில் லிஸ்ட்? அடுத்த தலை யார்? -
ஸ்டாலினை உடன் ஒன்றாக மேடை ஏற மறுத்த ராகுல் காந்தி? தேர்தலுக்கு பின் நோ கூட்டணியா? காங்கிரஸ் திட்டம்? -
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி பதவியிலிருந்து ஹசீனா சையத் நீக்கம் -
காங்கிரஸ் கட்சியில் இருந்து ஹசீனா சையத் விலகல்! கார்கே, செல்வப்பெருந்தகை மீது ஊழல் குற்றச்சாட்டு -
4,379 ஓட்டு ஷாக்! விஜய பிரபாகரன் அப்போ அப்படி பேசிட்டு.. விருதுநகரில் நடந்த அந்த ரகசிய சமரசம் என்ன -
Praveen: காங்கிரஸ் தலைமை அனுமதியுடனே விஜய்யை சந்தித்தேன்! வெடிகுண்டு வீசிய பிரவீன் சக்கரவர்த்தி! -
இந்த கட்சி லிஸ்ட்லயே இல்லை.. 10 சதவீதம் ஓட்டு வாங்கப்போறதே அவுங்ககிட்ட இருந்துதான்-ஆதவ் அர்ஜுனா -
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2000.. டியூஷன் அக்கா திட்டம்.. மேஜர் வாக்குறுதிகளை வெளியிட்ட காங்கிரஸ்! -
"எனக்கும் மரணம் வரும்.. என்னைப் புதைத்தாலும் எனது திட்டங்களைப் புதைக்க முடியாது” - முதல்வர் ஸ்டாலின் -
2021 vs 2026 தேர்தல்! எவ்வளவு வித்தியாசம்..? ராகுல் காந்தி பழைய ஃபார்மில் இருக்கிறாரா இல்லையா? -
பைசா செலவில்லை.. வெறும் ஏஐ வீடியோக்கள் - சொகுசாகப் பரப்புரை செய்யும் காங்கிரஸ் -
எனக்கு ஓட்டு போடாதீங்க.. தேர்தலுக்கு முன் போட்டியில் விலகிய காங்கிரஸ் வேட்பாளர்! பின்னணியில் பாஜக? -
விஜய்க்கு ‘மெச்சூரிட்டி' இல்லை.. விளாசிய கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார்! கோபத்தின் பின்னணி














Click it and Unblock the Notifications