தம்பி இது கோவை.. யாருக்கிட்ட.. நட்சத்திர ஓட்டலில் கையும் களவுமாக இளைஞர்.. செம்ம சம்பவம்
கோவை: நட்சத்திர ஓட்டல்களில் தங்கி போலி ரசீது கொடுத்து ஏமாற்றி வந்த ஆந்திர இளைஞர், கோவையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி ஏமாற்றிய போது கையும் களவுமாக சிக்கினார்.
திருடர்களில் பணத்தை திருடுவது, நகையை திருடுவது போன்ற திருட்டுகளை படிக்காத திருடர்கள் அதிகம் செய்கிறார்கள், படித்த திருடர்கள் வித்தியாசமான முறையில் திருடுகிறார்கள். தான் கற்ற கல்வியை திருடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். ஆன்லைனில் மோசடி செய்து பணம் சம்பாதிப்பது, மற்றவர்களின் பலவீனங்களை கண்டுபிடித்து பணம் சம்பாதிப்பது, அக்கவுண்டை ஹேக் செய்து பணம் திருடுவது போன்ற செயல்களை செய்கிறார்கள்..

சிலர் இன்னும் வித்தியாசமாக ஓட்டல்களில் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் எஸ்கேப் ஆவார்கள். அதேபோல் நட்சத்திர ஓட்டல்களில் தங்கி உல்லாசமாக இருந்துவிட்டு பணம் செலுத்தாமல் எஸ்கேப் ஆகிறார்கள்.. நட்சத்திர ஓட்டல்களை பொறுத்தவரை ஒருநாள் தங்கும் கட்டணமே 5000க்கு மேல் இருக்கும். அங்கு ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் வரை கூட தங்கியிருந்துவிட்டு பணம் செலுத்தாமல் போலியாக ரசீது காட்டி ஏமாற்றும் சம்பவங்கள் நடக்கிறது. அப்படி ஒரு சம்பவம் கோவையில் நடந்துள்ளது. ஆனால் கோவையில் உஷார் ஆனதால் திருடன் சிக்கியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணம் பகுதியை சேர்ந்த 24 வயதாகும் போராடா சுதீர், கோவையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுள்ளார்.அங்குள்ள ஊழியர்களிடம் ஆன்லைனில் தான் அறை முன்பதிவு செய்துள்ளார். ஆனால் அதற்கான தொகையை செலுத்திவிட்டதாகவும் ஒரு ரசீது ஒன்றை காட்டியுள்ளார் அந்த ரசீதை ஊழியர்கள் ஆய்வு செய்தபோது அது போலியானது என்பதை கண்டுபிடித்தனர்.
ஆனால் அதனை காட்டிக்கொள்ளாத நட்சத்திர ஓட்டல் ஊழியர்கள், போனில் அழைத்து, கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலி பில் கொடுத்து மோசடி செய்த போராடா சுதீரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த போராடா சுதீர் இந்தியாவில் உள்ள பல நட்சத்திர ஓட்டல்களில் இதுபோன்று போலி ரசீதை கொடுத்து மோசடி செய்து வந்த நிலையில், தற்போது கோவையில் சிக்கியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications