கோவை தெற்கில் இருந்து ஆரம்பிக்கும் திமுகவின் தோல்வி.. சவால் விட்ட அண்ணாமலை
கோவை: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோவை தேர்தல் களத்தை தமிழ்நாடே உற்று நோக்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில், திமுகவின் வெற்றி கோவை தெற்கில் இருந்து ஆரம்பிக்கும் என்று முதல்வர் கூறியிருந்தார். ஆனால் திமுகவின் தோல்வி கோவை தெற்கில் இருந்து ஆரம்பித்து சேப்பாக்கம் வரை செல்லும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்ற அனைத்து எம்பிக்களும் ஆதரவு தர வேண்டும். நடிகர்கள் பின்னால் ரசிகர்கள் செல்லக்கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் எந்த கோணத்தில் பேசினார் என தெரியவில்லை. அவர் பெரிய நடிகர், சிறந்த பண்பாளர், நல்ல மனிதர். பல நடிகர்கள் அரசியலில் ஜெயித்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட்டபோது யாருக்கும் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் அரசியல் செய்தேன். செந்தில் பாலாஜி 300 நாள் ஜெயிலில் இருந்தவர். அவரது தம்பி ஒன்றரை வருடம் தலைமறைவாக இருந்தவர். கோவை தெற்கில் செந்தில் பாலாஜி வெற்றிக்கு வாய்ப்பு இல்லை. கரூரைச் சேர்ந்த 18 சுயேட்சைகளை கோவை தெற்கு தொகுதியில் செந்தில்பாலாஜி போட்டியிட வைத்துள்ளார்.
திமுகவில் தோல்வி
அவர்கள் அனைவரும் ஒரே நோட்டரியிடம் தான் கையெழுத்து வாங்கியுள்ளார்கள். தொண்டாமுத்தூரில் கரூரை சேர்ந்த 3 பேர் நிற்கிறார்கள். திமுகவின் வெற்றி கோவை தெற்கில் இருந்து ஆரம்பிக்கும் என்று முதல்வர் சொன்னார். ஆனால் திமுகவின் தோல்வி இங்கு ஆரம்பித்து, சேப்பாக்கம் வரை செல்லும். திமுகவினர் வேட்புமனுக்கள் பல கட்டங்களை தாண்டி தான் உள்ளே வந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் நாம் யாரையாவது அழைத்து வந்து வேலை செய்ய வைத்தமோ?. கரூர் நபர்கள் எப்படி வேலை பார்க்கிறார்கள்?. கையிலும், பையிலும் நிறைய பணத்துடன், அண்டா, குண்டாவுடன் சுற்றி வருகிறார்கள். செந்தில் பாலாஜி தவறாக சேர்த்த சொத்துகளை அவரது பினாமிகள் கந்து வட்டிக்கு கொடுத்து சேர்த்த பணத்தை வீடு வீடாக இரைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஸ்டாலின் என்ற வார்த்தை
அண்ணன் சீமான் கடுமையாக பரப்புரை செய்து வருகிறார். சீமானின் கருத்தை பொது இடத்தில் வைத்து வருகிறார். ஆனால் சிலர் களத்திற்கே வருவதில்லை. வேட்பாளர்களாக இருக்கும் அனைவரும் வெற்றி பெறுவதை உறுதி செய்யும் வகையில் நான் பிரச்சாரம் மேற்கொள்கிறேன். அமித்ஷாவின் சுற்றுப்பயணம் குறித்து விரைவில் வெளியிடப்படும். மூத்த தலைவர்களின் பிரச்சார திட்டம் ஒன்றுக்கு ஒன்று சிக்கலாகாத வகையில் பயணத்திட்டம் முடிவு செய்யப்படும்.
புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல்காந்தி, ஸ்டாலின் என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை. ஸ்டாலினும், ராகுலும் ஒரே மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபோதும், இருவரும் சந்திக்கவில்லை. ராகுல் விமான நிலையத்தில் இருந்து விமானம் மாறிய போதும், கோவையில் நிற்கும் இரண்டு வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்யவில்லை. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி வெல்வது குறித்து அவருக்கு விருப்பமில்லை என தோன்றுகிறது.
விஜய்க்கு அனுமதி
விஜய்க்கு கூட்டம் கூடுவது குறித்து கூடுதல் போலீசாரை நியமித்து, தேர்தல் ஆணையம் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்க வேண்டும். காவல் துறை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தமிழ்நாடு அதிகாரிகள், தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தின் கீழ் உள்ளனரா, அல்லது இன்னும் திமுகவினரின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளனரா என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது.திமுக தலைவர்கள், தொண்டர்கள் பரிசுப் பொருட்களை கொண்டு செல்வதை பிடிக்க வேண்டும். அப்பாவி மக்களின் பணம் மட்டுமே பறிமுதல் செய்யப்படுகிறதே தவிர அரசியல்வாதிகளின் பணம் பறிமுதல் செய்யப்படுவதை பார்க்க முடிவதில்லை என்றார்.
-
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications