கோவையில் மறுவாக்குப்பதிவு நடத்தணும்.. 1 லட்சம் வாக்குகளை காணோம்.. அண்ணாமலை பரபர புகார்!
கோவை: கோவை லோக்சபா தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். அந்த பகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என அண்ணாமலை கோரியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நேற்று தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நேற்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.

கோவை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அங்கப்பா பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வந்தது. அப்போது, வாக்களிக்க வந்த பலரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லை என தெரிவிக்கப்பட்டதால், பூத் ஏஜெண்டுகள் மற்றும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த கோவை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளரும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை, அங்கு வந்து வாக்காளர்களின் பெயர், வாக்காளர் பட்டியலில் இல்லாதது குறித்து அங்கு இருந்தவர்களிடம் விசாரித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "கோவையில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்திருந்தாலும், சோகமான விஷயம் என்னவென்றால் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. எந்த அடிப்படையில் நீக்கியுள்ளனர் எனத் தெரியவில்லை.
கோவை மக்களவை தொகுதியில் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அங்கப்பா பள்ளியில் ஒரே வாக்குச்சாவடியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. சுமார்1,353 வாக்குகள் உள்ள இடத்தில் 70 சதவீதம் அளவுக்கு வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சராசரியாக 20 பெயர்கள் இல்லை. உயிரிழந்த கணவருக்கு வாக்கு உள்ளது. ஆனால், உயிரோடு இருக்கும் மனைவிக்கு வாக்கு இல்லை. கோவையில் கடந்த 40 ஆண்டுகளாக வாக்களித்து வந்தவருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. மலேசியா, மஸ்கட் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பலருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது.
பல்லடம், சூலூர் என பல இடங்களில் பாரம்பரியமாக பாஜகவுக்கு வாக்கு செலுத்தி வருபவர்களுக்கு நிறைய இடங்களில் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் பெரிய அளவில் திட்டமிட்டு கோவையில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் பெயர்களை இவ்வாறு நீக்கி உள்ளனர். இதில் அரசியல் தலையீடு இருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது.
உடனடியாக இதுதொடர்பான தரவுகளை சேகரித்து ஆவணமாக தேர்தல் அலுவலர், தேர்தல் பார்வையாளருக்கு அளித்து வருகிறோம். இதை எல்லாம் தொகுத்து மனுவாக அளிக்க உள்ளோம். அந்த பகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும். தேர்தல் அதிகாரிகள் என்ன வேலை செய்தனர் என்று தெரியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் சுமார் 1 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கிவிட்டதாக பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் குற்றம் சாட்டிய நிலையில், அதேபோல, கோவையிலும் 1 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications