சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் மேலும் ஒருவர் கைது.. கோவையில் நடந்த "ஆபரேஷன்"
கோவை: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வங்கி ஒன்றில் கொள்ளை அடிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ளது ஃபெடரல் வங்கி. இங்கு பெரும்பாலான மக்கள் தங்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர். இந்த வங்கியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் வங்கி முன்பு கண்ணீருடன் குவிந்தனர். இந்த வழக்கில் வங்கி ஊழியரே கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

குற்றவாளிகள்
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நேற்று முன் தினம் பாலாஜி, செந்தில் முருகன், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட வங்கி ஊழியர் ஜிம் முருகன் நேற்று தனிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

4 பேர் கைது
இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் கொள்ளையில் தொடர்புடைய சூர்யா என்பவரை பிடிப்பதற்காக தனிப்படையினர் கோவை சென்றனர். அங்கு விடிய விடிய நடத்திய தேடுதல் வேட்டையில் சூர்யாவை கைது செய்தனர்.

5 பேர் கைது
இதுவரை இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இன்னும் வேறு யாராவது இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இருக்கிறார்களா என கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளையர்கள் ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். இவர்கள் மீது ஏற்கெனவே எந்த வழக்கும் இல்லை. தற்போதுதான் புதிதாக கொள்ளை சம்பவத்தில் அதுவும் சரியாக திட்டமிட்டு நடத்தியுள்ளார்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நம்பிக்கை
மேலும் இந்த கொள்ளையில் முருகனை தவிர வேறு எந்த வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பில்லை என போலீஸார் தெரிவித்துள்ளார்கள். விரைவில் மீதமுள்ள நகைகளும் மீட்கப்படும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications