கேஸ் விலை உயர்வை ஒரே வார்த்தையில் கூற முடியாது.. திமுக அரசை பாராட்டிய பாஜக கவுதமியின் கருத்து
குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமைத் தொகை குறித்து பாஜக கவுதமி கருத்து
கோவை: தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மகளிருக்கு மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகை திட்டம் குறித்து நடிகையும் பாஜக நிர்வாகியுமான கவுதமி கருத்து தெரிவித்துள்ளார்.
2023-2024 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திட்டங்கள் என்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகை, மாதந்தோறும் மின் கட்டணம், சிலிண்டருக்கு மானியம், முதியோர் உதவித் தொகை உயர்வு உள்ளிட்டவை ஆகும்.
இவற்றுள் ஒரே ஒரு எதிர்பார்ப்பு மட்டுமே நிறைவேறியது. அது மகளிருக்கு ரூ 1000 உரிமைத் தொகை. அதாவது தகுதிவாய்ந்த மகளிருக்கு ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜக எதிர்ப்பு
இதற்கு அதிமுக , பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமைத் தொகை என வாக்களித்துவிட்டு தற்போது தகுதி வாய்ந்த பெண்களுக்கு என ஏன் கண்டிஷன் வைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர். அது போல் தேர்தல் அறிக்கையில் கூறியது இப்போதாவது திமுகவுக்கு நினைவுக்கு வந்ததே.

சந்தோஷம்
அதுவரை சந்தோஷம். முதலில் இந்த திட்டம் அறிவித்ததை வரவேற்கிறோம். அதே வேளையில் அனைத்து மகளிருக்கும் கொடுக்க வேண்டும். மேலும் 28 மாதங்கள் நிலுவைத் தொகையை கணக்கிட்டு வரும் செப்டம்பர் முதல் இந்த திட்டம் தொடங்கப்படும் நிலையில் அந்த மாத உரிமைத் தொகை ரூ 1000த்துடன் சேர்ந்து நிலுவைத் தொகை ரூ 28 ஆயிரம், ஆக மொத்தம் ரூ 29 ஆயிரம் வழங்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

ரூ 1000 உதவித் தொகை
இப்படியாக ரூ 1000 உரிமைத் தொகை குறித்து அரசியல் கட்சிகளுக்கு மட்டும் அல்லாமல் மக்கள் மனதிலும் ஆயிரம் கேள்விகள் எழுகின்றன. இந்த நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் நடிகை கவுதமி பங்கேற்று உரையாற்றவுள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் ஜி20 மாநாடு நமது இந்தியாவில் நடப்பது நமது தேசத்திற்கே ஒரு கவுரவம், அங்கீகாரம்.

அங்கீகாரம்
இந்த கவுரவமும் அங்கீகாரமும் தற்போது கோவைக்கு கிடைத்துள்ளது. நம் தேசத்தின் இளைஞர்களுடைய எதிர்காலம் தேசத்திற்கு மட்டுமல்லாமல் உலக வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியமானது தேவையானது என எடுத்துக்காட்டி மத்திய இணையமைச்சர் எல் முருகன் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் பேசியுள்ளனர். ஜி20 இல் இனி அடுத்தடுத்து வரக் கூடிய நிகழ்ச்சிகள் இன்னும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் இருக்கும்.

ஜி20
அனைவருக்கும் தேவையான நிகழ்வாகவும் அமையும். ஜி20யில் இருந்து நம்மால் என்ன எடுத்துக் கொள்ள இயலும் என்பதை நாம் பார்க்க வேண்டும். சுயநலம் என்பது நமது நல்லதிற்காக நாம் தலை நிமிர்ந்து இன்னும் கவுரவமாக பெருமையாக வாழ்வதற்கு என்ன சாதிக்கலாம் என்பதை இதிலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி என்பது உலக அளவில் எடுத்துக்காட்டாக இருக்கிறது.

மீண்டும் அரசியல் பேசக் கூடாது
ஆனால் ஜிஎஸ்டி விவகாரத்தில் மீண்டும் அரசியல் பேசக் கூடாது. அதுதான் தேசத்திற்கு மிகவும் நல்லது. தமிழக அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 திட்டம் கொண்டு வந்துள்ளது குறித்து கேட்கிறீர்கள். மக்களுக்கு யார் நன்மை செய்தாலும் அதை நான் வரவேற்பேன். அரசாங்கமார இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் அதுதான் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும் என்றார். கேஸ் விலை உயர்வு குறித்து கேட்ட போது கவுதமி கூறுகையில் இதற்கெல்லாம் ஒரே வார்த்தைில் பதில் கூற முடியாது. உலக அளவில் நடைபெறுகிற பல்வேறு விஷயங்கள் சேர்ந்துதான் இது போன்ற மாற்றங்களை கொண்டு வருகின்றன. இவ்வாறு நடிகை கவுதமி பேசினார்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை!











Click it and Unblock the Notifications