ஒலிம்பிக்கில் சிலம்பம்.. இது கட்டாயம் நடக்கும்.. விளையாட்டு வீரர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அண்ணாமலை
கோவை: கல்விக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறதோ, அதேபோல விளையாட்டிற்கும் விரைவில் நிதி ஒதுக்கப்படும். எந்த நாடு ஒலிம்பிக் போட்டியை நடத்துகிறதோ அவர்கள் இரண்டு விளையாட்டுகளை சேர்த்துக் கொள்ள முடியும். சிலம்பத்தை சேர்த்துவிட்டால் கோல்ட் மெடல் நமக்குதான். சிலம்பத்தை ஒலிம்பிக் போட்டியில் சேர்ப்பதற்கான முயற்சியை எடுப்போம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை, சிந்தாமணி புதூர் பகுதியில் மஸ்ஸில் மூவ்மென்ட் அன்ஸ்கூல் ஸ்போர்ட் பெலிகான் நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள் மத்தியில் அண்ணாமலை பேசுகையில், வலிமையான இந்தியாவில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் விளையாட்டு வீரர்கள்.

2028 ஒலிம்பிக் போட்டிகள் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது. 2032 ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. 2036 ஆசியாவில் ஏதாவது ஒரு நாட்டில் நடக்கும். இந்தியா மற்றும் கத்தார் ஆகிய இரு நாடுகளும் தங்கள் நாடுகளில் ஒலிம்பிக் போட்டியை நடத்த முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. இந்திய பிரதமர் மோடி, நாங்கள்தான் ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
இன்னும் ஆறு மாதத்தில் ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்த வேண்டுமா?. அல்லது கத்தார் நடத்த வேண்டுமா? என்பதை முடிவு செய்ய இருக்கின்றனர். இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த ஒரு லட்சம் கோடி செலவு செய்ய பிரதமர் திட்டமிட்டுள்ளார். 2036 இல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
ஒலிம்பிக் போட்டிக்கு ஒரு லட்சம் கோடி செலவு செய்து நான்கு மெடல் இந்தியா வாங்கினால் சிரிக்க மாட்டார்களா?. 2036 இல் 200 மெடல் வாங்க வேண்டும் என்றால் இதற்கு unschool போன்ற பயிற்சி மையங்கள் என்பது முக்கியமானது. 2030 க்கு பிறகு இந்த துறையில் யார் இருக்கின்றார்களோ அவர்கள் கடவுள் மாதிரி. அவ்வளவு தேவை விளையாட்டு வீரர்களுக்கு இருக்கும்.
Unschool movement என்பது முக்கியமானது. இந்திய வரலாற்றில் நீச்சல் போட்டிகளில் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு நாம் சென்றதே கிடையாது. 23வது ரேங்க் தான் நம்முடைய ரேங்க். 100 மீட்டர் ஓட்டத்தில் இறுதிப் பட்டியலில் பங்கேற்றது கிடையாது. 200 மெடல் என்று சாதாரணமாக சொல்லிவிட்டேன். ஆனால் அதற்கு 40 லட்சம் பேர் பங்கேற்றால் மட்டுமே நம்மால் 200 பேரை தேர்வு செய்து எடுக்க முடியும்.
ஒலிம்பிக் ஏன் நடத்துகின்றோம் என்றால் நாங்கள் முதல்தர உலக நாடு என்பதை மற்ற நாடுகளுக்கு காட்டுவதற்காகத்தான். சீனா என்றால் வளராத நாடு கம்யூனிஸ்ட் நாடு என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒலிம்பிக் நடத்தியவுடன் வளர்ந்த நாடு என்று சொல்லிவிட்டனர். 200 மெடல் வாங்குவதற்கு அதற்கு ஏற்றபடி பயிற்சியாளர்கள் தேவை.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நாம் நடத்தினோம். கேலோ போட்டிகளில் சிறப்பான வீரருக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக கொடுக்கப்படுகிறது. 5 லட்சம் ரூபாய் வரை பயிற்சிக்காக செலவழிக்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மூன்று வருடத்தில் 1.20 லட்சம் ரூபாய் ஊக்க தொகையை 527 பேர் வாங்கி இருக்கின்றனர்.
இந்தியாவில் 152 வீரர்களை கண்டுபிடித்திருக்கிறோம். விளையாட்டிற்காக பணத்தை அள்ளி தெளித்துக் கொண்டு இருக்கிறோம். கணக்கு வழக்கு பார்க்காமல் விளையாட்டுக்கு செலவழித்துக் கொண்டிருக்கிறோம். பெற்றோர் கண்டிப்பாக தங்களது குழந்தைகளை விளையாட்டுத் துறைக்கு கொண்டு வர வேண்டும்.
தற்பொழுது யாரை பார்த்தாலும் சாப்ட்வேர் இன்ஜினியர், மருத்துவர் என்று கூறி வருகின்றனர். ஆனால், அத்லெட்டுகள் குறைந்துவிட்டனர்.
நேஷனல் ஸ்கில் டெவலப்மென்ட் கார்ப்பரேஷனுடன் இணைந்து இந்த unschool movement நடத்தப்படுகின்றது. தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இருக்கிறது?. 66 சதவீதம் பள்ளிகளில் மட்டும்தான் விளையாட்டு மைதானங்கள் இருக்கின்றன. விளையாட்டு ஆசிரியர்கள் எத்தனை பள்ளிகளில் இருக்கின்றனர்.
தமிழகத்தில் விளையாட்டு ஆசிரியர்கள் என மழலையர் பள்ளிகளில் நான்கு சதவீதம் மட்டும் தான் இருக்கின்றனர். பொதுவாக 85 சதவீதம் விளையாட்டு ஆசிரியர்களே இல்லை. புறநகர் பகுதிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் இருந்தால்தான் சிறந்த விளையாட்டு வீரரை கண்டுபிடித்து கொண்டு வர முடியும். நிறைய பேரை தயார் செய்து அவர்களை பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்களாக கொண்டு செல்ல வேண்டும்.
தற்பொழுது கல்விக்கு எவ்வளவு நிதி ஒதுக்கின்றோமோ, அதே அளவு நிதி விளையாட்டிற்கு இன்னும் சிறிது நாட்களில் வந்துவிடும். கிரௌவ் மெகா என்ற டெக்னிக் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுக்க வேண்டும். எந்த நாடு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகின்றார்களோ அவர்கள் இரண்டு விளையாட்டுகளை சேர்த்துக் கொள்ள முடியும். சிலம்பத்தை சேர்த்துவிட்டால் கோல்ட் மெடல் நமக்குத் தான் கிடைக்கும். கேலோ இந்தியா போட்டிகளில் சிலம்பு இருக்கிறது.
சிலம்பத்தை ஒலிம்பிக் போட்டியில் சேர்ப்பதற்கான முயற்சியை எடுப்போம் என்ற உறுதிமொழியினை கொடுக்கின்றோம். அத்தலெட் வீரர்களுக்கு மைன்ட் கோச் தேவை. அவர்களை பள்ளி சிஸ்டத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்றார்.
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications