உங்கள் சுயநலத்துக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்வீர்களா கமல் – வானதி சீனிவாசன் கேள்வி
கோவை: திமுக கூட்டணியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா ஒதுக்கீடு செய்துள்ளனர். இதனை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் கமலை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வானதி சீனிவாசன், கமல் தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்துள்ளார் என்று விமர்சித்துள்ளார்.
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், அவரின் தொகுதியில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக பொது மக்களுக்கு வீடு, வீடாக சென்று நோட்டீஸ் விநியோகம் செய்தார்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் கூறுகையில், மதுரையில் வருகிற 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் முருக கோயில்கள் இருக்கும் இடங்களில் அரசு சார்பில் செய்யும் இடையூறுகளை இளைஞர்கள், மக்களிடம் எடுத்து சொல்லி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
இந்த சிறப்புமிக்க மாநாடு முருக பக்தர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் ஒரு மாநாடாக இருக்கும். பக்தர்களின் மன வேதனைக்கு தீர்வு தரும் மாநாடாக இருக்கும். நடிகர் கமல்ஹாசன் இரண்டு தேர்தல்களில் அவருக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்து விட்டு ராஜ்யசபா எம்.பி பதவிக்காக திமுகவிடம் சென்று விட்டார்.
சினிமா ஷூட்டிங்கில் கேமரா முன்பு பேசிவிட்டு, பிறகு மறந்து விடுவது போல அரசியல் வாழ்க்கையிலும் வசனங்களாக பேசி அதை மறந்து வருகிறார். எப்படியாவது நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று சுய நலத்தோடு தன்னை நம்பிய வாக்காளர்களுக்கு அவர் துரோகம் செய்துள்ளார். மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற முடியாமல், கமல் திமுகவினர் பின்னால் ஒளிந்து கொண்டு இந்த பதவியை பெற்றுள்ளார்.
மதுரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அவரது அண்ணன் அழகிரியும் சந்தித்ததை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அண்ணன், தம்பிகள் பிரிவது, சேர்வது எல்லாம் இயல்பு தான். அதே நேரத்தில் மதுரையில் முதலமைச்சர் பார்வையிட சென்றபோது அங்கு துணிகளை போட்டு மூடி வைத்திருந்த சம்பவம் மிகவும் தவறானது.
அதேபோல தான் கோவை மாவட்டத்திலும் பல இடங்களில் குப்பைகளை மறைத்து வைத்து வருகிறார்கள். வட மாநிலங்களில் தீவிரவாதம் மற்றும் மாவோயிஸ்டுகள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை மனம் திருந்த செய்கிறார்கள். இதனால் அங்கு தீவிரவாதம் குறைந்துள்ளது. ஆனால் இங்கு அவர்களுக்கு ஆதரவாக முன்னணி அரசியல் தலைவர்களே பேசுவது தவறானது.
மத்திய அரசு கடந்த நான்கு வருடங்களில், தமிழ்நாட்டிற்கு பல ஆயிரம் கோடி மதிப்பில் ஏராளமான திட்டங்களை ஒதுக்கியுள்ளது. இந்த தகவல்களை பிரதமர் நரேந்திர மோடியே ராமேஸ்வரம் கூட்டத்தில் பேசியுள்ளார். எனவே இதைப் பற்றி குறை கூறுபவர்களை ஒன்றும் சொல்ல முடியாது." என்று கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications