மணமக்கள் அதிமுக-பாஜக மாதிரி இருக்கக்கூடாது..ஒரே ஒரு கோரிக்கை வைக்கிறேன்..உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்!
கோவையில் 81 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுகவும் பாஜகவும் மாதிரி இருந்து விடாதீர்கள் என்று கூறினார்.
கோவை: முதல்வர் மு.க. ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி கோவையில் 81 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் கூடிய திருமணத்தை நடத்தி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுகவும் பாஜகவும் மாதிரி இருந்து விடாதீர்கள். ஒருத்தர் காலில் ஒருத்தர் விழாதீங்க. காலில் விழுந்தவர்கள் நிலைமை என்ன என்பது தெரியும். பெற்றோர், அவரவர் முன்னோர்களின் கால்களில் மட்டுமே விழ வேண்டும் என்று அட்வைஸ் செய்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி கோவையில் 81 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் கூடிய திருமணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார். இந்த விழாவில் அவர் பேசியதாவது:-
கரூர் மாவட்ட அமைச்சராக இருந்தாலும் கோவை மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் நியமித்தார். செந்தில் பாலாஜி கடுமையான உழைப்பாளி. மணமக்களுக்கு தாலி, பட்டு வேட்டி, சேலை உள்பட சீர்வரிசை பொருட்களை பார்த்து பார்த்து செந்தில் பாலாஜி செய்துள்ளார்.

அடிமையாக இருக்கக் கூடாது
மணமக்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், யாருக்கும் யாரும் அடிமை கிடையாது. இங்கே நடந்திருப்பது சுயமரியாதை திருமணம். ஒருகாலத்தில் சுயமரியாதை திருமணம் அங்கீகரிக்கப்படவில்லை. பெரியார் தான் சுயமரியாதை திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று போராடினார். அதை வழிநடத்தியவர் பேரறிஞர் அண்ணா. சுயமரியாதை திருமணம் என ஏன் சொல்லப்படுகிறது என்றால் மணமக்கள் இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருவர் அடிமையாக இருக்கக் கூடாது.

அதிமுகவும் பாஜகவும் மாதிரி
உங்களுடைய உரிமையை கேட்டு வாங்க வேண்டும். உதாரணத்திற்கு அதிமுகவும் பாஜகவும் மாதிரி இருந்து விடாதீர்கள். ஒருத்தர் காலில் ஒருத்தர் விழாதீங்க. காலில் விழுந்தவர்கள் நிலைமை என்ன என்பது தெரியும். பெற்றோர், அவரவர் முன்னோர்களின் கால்களில் மட்டுமே விழ வேண்டும். தவறு செய்தால் மனைவி காலில் கூட விழலாம். ஆனால் ஒருபோதும் உங்கள் உரிமையை மட்டும் விட்டு கொடுக்காதீர்கள்.

தமிழ் பெயரை வையுங்கள்
இங்கு வந்துள்ள மணமக்களுக்கும் மற்றும் அவர்களது உறவினர்களுக்கும் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். இங்க 81 திருமணங்கள் நடத்தி வைத்திருக்கிறோம். நாங்கள் ஒரே ஒரு கோரிக்கையைத்தான் வைக்கிறேன். உங்களுக்கு பிறக்க கூடிய குழந்தைகளுக்கு நீங்கள் சுத்தமான தமிழ் பெயர்கள் வையுங்கள். கைத்தட்டிவிட்டு போய்விடக்கூடாது. சொல்லுற வார்த்தையை காப்பாற்ற வேண்டும். இந்த ஒரு உறுதிமொழியை மட்டும் உங்களிடம் கேட்கிறேன்.

5 லட்சம் கோடி கடனை விட்டு சென்றது
இந்தி மொழியை கொஞ்சம் கொஞ்சமாக திணிக்கிறார்கள். தற்போது என்ன பெயர் வைக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அர்த்தமும் புரியவில்லை. எனவே சுத்தமான தமிழ் பெயரை வையுங்கள். வீட்டில் அரசியல் பேசுங்கள். தமிழ்நாட்டில் என்ன நடக்குது.. இந்தியாவில் ஒன்றிய அரசு என்ன செய்கிறது. திராவிட மாடல் ஆட்சி அமைந்து நமது முதல்வர் 20 மாதங்களில் தமிழ்நாட்டு மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் தீட்டியிருக்கிறார். அது எப்படி உபயோகமாக இருக்கிறது. அதிமுக ஆட்சி நம்மிடம் அரசை விட்டுவிட்டு செல்லும் போது 5 லட்சம் கோடி கடனை விட்டு சென்றது. அதனை திறம்பட கையாண்டு சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறோம்.

நியாகப்படுத்த வேண்டியுள்ளது
நம்ம மக்களுக்கு மறதி அதிகம். அடிக்கடி நியாகப்படுத்த வேண்டியுள்ளது. எனவே வீட்டில் அரசியல் பேசுங்கள், அப்போதுதான் என்ன நடக்கிறது என்பது தெரியும். அதிமுக மற்றும் பாஜகவினர் தேர்தல் வரும்போது தான் வெளியே வருவார்கள். தேர்தல் முடிந்ததும் உள்ளே சென்று விடுவார்கள். பிரச்சினை வந்தால் வெளியே வருவார்கள். தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு வந்தார்கள். மிகப்பெரிய தோல்வியை பார்த்து விட்டார்கள்.

தேர்தல் இருக்கோ இல்லையோ
இனி அடுத்த 8 மாதங்களுக்கு வர மாட்டார்கள். மீண்டும் நாடாளுமன்ற தேர்தலின் போது தான் வருவார்கள். ஆனால் திமுகவினர் மட்டும் தான் தேர்தல் நடைபெறாத நேரத்தில் கூட மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டிருக்கிறோம். தேர்தல் இருக்கோ இல்லையோ எப்போதும் திமுக மக்களுக்கு பணியாற்றும். எனவே நீங்கள் இந்த அரசுக்கு எப்போதும் துணை இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications