கோவை மக்களே 10 நாள் தான் டைம்.. உக்கடம் மொத்தமாக மாறுது.. குட்நியூஸ்
கோவை: கோவை உக்கடம் மேம்பாலத்தில் இருந்து கிழக்கே உள்ள சுங்கம் பகுதிக்கு செல்லும் பாலம் மற்றும் சாலை பணிகள் முடிவடைந்து விட்டது. இதன் காரணமாக அடுத்த 10 நாட்களில் அந்த பாதை போக்குவரத்துக்கு திறந்து விடப்பட உள்ளது. இனி திருச்சி ரோடு சுங்கத்தில் இருந்து மேம்பாலத்தில் ஏறி ஆத்துப்பாலத்துக்கு போகலாம். ஆத்துப்பாலத்தில் இருந்து மேம்பாலம் வழியாக சுங்கம் பகுதிக்கு இறங்கி செல்லலாம்.
கோவை மாநகரில் உக்கடம் என்பது அந்த மாநகரின் முக்கியமான வணிகப்பகுதியாகும். ரயில் நிலையம், பேருந்துநிலையம், வணிக நிறுவனங்கள், கேரளாவிற்கு செல்லும் வழி, பொள்ளாச்சி செல்லும் வழி, பாலக்காடு செல்லும் வழி என நகரின் ஒரு பாதி மக்கள் இன்னொரு பகுதிக்கு செல்லும் வழி என முக்கியமான இடமாக திகழ்கிறது. இங்கு எப்போதுமே கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். காலை மற்றும் மாலையில் பீக் அவர்ஸில் இந்த சாலையில் வெறும் 4 நிமிடத்தில் போக வேண்டிய பாதையை கடக்க அரை மணி நேரம் வரை கூட ஆகும்.

இந்த போக்குவரத்து நெரிசலை தீர்க்க உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை 3.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.481 கோடியில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யபட்டது. இந்த பாலம் கட்டுமானப்பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக முழு வீச்சில் நடந்தது. இப்பாலம் கடந்த ஆகஸ்ட் 9-ந்தேதி முதல்வர் ஸ்டாலினால் போக்குவரத்துக்கு திறந்து வைக்கப் பட்டது. அதன்பிறகு உக்கடம் மேம்பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல தொடங்கி யதால் உக்கடம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்தது.
எதிர்பார்த்தபடியே உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்து போதிலும், பாலக்காடு ரோடு மற்றும் பொள்ளாச்சி ரோடு பகுதியில் இருந்து வாகனங்கள் அனைத்தும் உக்கடம் மேம்பாலத்தில் ஏறி மீன்மார்க்கெட் அருகே இறங்கின. அந்த இடத்தில் அனைத்து வாகனங்களும் ஒன்றாக இறங்கும் போது நெரிசல் ஏற்பட்டது. இதனால் அனைத்து வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் செல்வபுரம் பைபாஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள், உக்கடம் பஸ்நிலையம் வழியாக வரும் வாகனங்களும் சேரும் இடமாக இருந்ததால் நெரிசல் அதிகமானது.
இதனால் உக்கடம் போலீஸ் நிலையம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேம்பாலம் திறக்கப்பட்ட போதிலும், அடுத்த நாளே போக்குவரத்து நெரிசல் கார ணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஏனெனில் அந்த மேம்பாலத்தில் இருந்து திருச்சி ரோடு சுங்கம் பகுதிக்கு செல்வதற்கான பால பணிகள் முடிவடையாமல் இருந்தது. இதனிடையே கூடட நெரிசலை தடுக்க பஸ்கள் அனைத்தும் மீன் மார்க்கெட் அருகே திருப்பி விடப்பட்டது. இதனால் மேம்பாலத்தில் நெரிசல் குறைந்து வாகனங்கள் தற்போது ஓரளவு எளிதாக செல்கின்றன.
இந்த சூழலில் உக்கடம் மேம்பாலத்தில் இருந்து கிழக்கே உள்ள சுங்கம் பகுதிக்கு செல்லும் பாலம் மற்றும் சாலை பணிகள் தற்போது முடிவடைந்து விட்டன. இந்த பாதை எப்படி இருக்கிறது என்றால், 5.5 மீட்டர் அகலத்தில் ஏறுவதற்கும், 5.5 மீட்டர் அகலத்தில் இறங்குவ தற்கும் தனித்தனி வழிகளுடன் உள்ளது. மேம்பாலத்தில் இருந்து 180 மீட்டர் இறங்குதளம் இருக்கிறது. தற்போது மின்விளக்குகள், மற்றும் தடுப்பு பலகைகள் பொருத்தும் பணிகள் நடக்கிறது. இந்த பணிகள் விரைவில் முடிந்துவிடும்.
எனவே அடுத்த 10 நாட்களில் போக்குவரத்துக்கு திறந்து விடப்படும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுங்கம் பாதை திறக்கப்பட்டால், திருச்சி ரோடு சுங்கத்தில் இருந்து மேம்பாலத்தில் ஏறி ஆத்துப்பாலத்துக்கு போக முடியும். இதேபோல் இனி ஆத்துப்பாலத்தில் இருந்து மேம்பாலம் வழியாக சுங்கம் பகுதிக்கு இறங்கலாம். மேம்பாலத்தில் இருந்து சுங்கத்துக்கு போக்குவரத்துக்கு திறக்கப்பட்ட பிறகு உக்கடத்தில் போக்குவரத்து நெரிசல் முழுமையாக குறையும் வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications