கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏ.ஆர். முருகதாஸின் உறவினர்களே இலவச மிக்ஸி, கிரைண்டர் வாங்கியுள்ளனர்- முதல்வர்

Google Oneindia Tamil News

கோவை: இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் இயக்குநர்களே இலவச மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை வாங்கியுள்ளனர் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் 18 எம்.எல்.ஏ.க்களால் தான் அவர்கள் தொகுதி முடக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த 18 எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவின் ஆட்சிக்கி துரோகம் செய்த காரணத்தால் தான் இறைவன் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளார்.

இந்த 18 தொகுதிகளிலும் மட்டுமின்றி 234 தொகுதிகளிலும் தொய்வு இல்லை. அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது.

வேலைக்காக தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு செல்லவில்லை. அண்டை மாநிலத்தவர்கள்தான் தமிழகத்திற்கு அதிக அளவில் வருகின்றனர்.

ஜெயலலிதா மரணம்- திண்டுக்கல் சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு! ஜெயலலிதா மரணம்- திண்டுக்கல் சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!

அரசுடன் இணக்கமாக

அரசுடன் இணக்கமாக

சட்ட ரீதியாக தீர்ப்பின் அடிப்படையில் தான் தருமபுரி எரிப்பு வழக்கில் கைதானவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.

அதிமுக 37 உறுப்பினர்களுடன் நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி. தமிழகத்திற்கு யார் நன்மை செய்கிறோமோ அவர்களை ஆதரிக்கிறோம். நன்மை கிடைக்கிற திட்டத்தை பெற மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம்.

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

விஜய் பேனர்களை அதிமுக கிழித்தார்கள் என்பது தவறான செய்தி. பொதுமக்களும் சேர்ந்து தான் கிழித்தார்கள். அந்தந்த தலைவர்கள் கொண்டு வந்த திட்டத்தை கொச்சைப்படுத்தும் போது தன்மானம் உள்ள கட்சிக்காரர்கள் கொதிக்கதான் செய்வார்கள்.

உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி சட்டமன்ற, நாடாளுமன்ற விசாரிக்க அமைக்கப்படவுள்ள தனி நீதிமன்றத்தில்,
பெரும்பாலான அமைச்சர்கள் திமுகவை சேர்ந்தவர்தான்.

காய்ச்சல்

காய்ச்சல்

நல்ல தண்ணீரை தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். தண்ணீர் தேங்காமல் பார்த்திக்கொள்வது ஒவ்வொருடைய கடமை. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் ஏற்பட்டவுடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். காய்ச்சல் முற்றிய நிலையில் வருகின்றனர்.

ஏழைகள் வீட்டில்

ஏழைகள் வீட்டில்

இந்தியாவிலேயே ரு.1,84, 00,000 பேருக்கு விலையில்லா பொருட்கள் தரபட்டுள்ளன. வசதிப் படைத்தவர்கள் வீட்டில் இருந்த மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் ஆகியன ஏழை, எளிய மக்கள் வீட்டில் உள்ளதற்கு அதிமுக அரசு தான் காரணம்.

இயக்குனர் முருகதாஸ் உறவினர் கூட இந்த விலையில்லா பொருட்களை பெற்றுள்ளனர்.

ஜனநாயக படுகொலை

ஜனநாயக படுகொலை

விலையில்லா திட்டங்களால் தான் 2011ல் 21% என்று திமுக ஆட்சியில் இருந்த நிலையில் தற்போது 46.8 % என்று அதிமுக ஆட்சியில் உயர் கல்வி தேசிய அளவில் முதல் இடத்திற்கு உயர்ந்துள்ளது.

இலங்கையில் நாடாளுமன்றத்தை கலைத்ததன் மூலம் சிறிசேனா மிகப்பெரிய ஜனநாயக படுகொலையை செய்துள்ளார்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

தமிழக இன மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

English summary
CM Edappadi Palanisamy says that A.R.Muurgadoss's relatives also got freebies issued by Tamil Nadu Government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X