Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையில் மிக பிரமாண்டமாக உருவாகும் பெரியார் நூலகம்.. அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை சிறை மைதானத்தில் 45 ஏக்கர் பரப்பளவில், ரூ.133 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா பணிகளை ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, அனுப்பர்பாளையத்தில் அமையும் பெரியார் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கோவை வந்தார். அரசுத் திட்டப் பணிகள் தொடர்பாக அந்தந்த மாவட்டங்களுக்கே சென்று கள ஆய்வு செய்யும் திட்டத்தின் ஒருபகுதியாக கோவையில் ஆய்வை நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

coimbatore mk stalin library

தமிழ்நாடு வீட்டு வசதி திட்டத்திற்கான நிலம் எடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் திரும்பப் பெறப்பட்டதால், கோவை மாவட்டத்தில் 468.89 ஏக்கர் நிலம் கை எடுப்பிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உரிமையாளர்களிடம் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து கெம்பட்டி காலனி பகுதிக்கு சென்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தங்க நகை தயாரிக்கும் பொற்கொல்லர்களை சந்தித்து அவர்களது குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். தொடர்ந்து கோவை பொள்ளாச்சி சாலையில் குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் கட்டப்பட்டு வரும் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதியை ஆய்வு செய்தார்.

இந்நிலையில், இன்று, கோவை சிறை மைதானத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 133 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின். கோவை சிறை மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா மாதிரியை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

அப்போது பூங்காவில் என்னென்ன வசதிகள் அமைகிறது, என்னென்ன தொழில் நுட்பங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது, எத்தனை வகை தோட்டங்கள் அமைகிறது என்பது பற்றிய விவரங்களை முதலமைச்சரிடம் தெரிவித்தார் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன். கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணிகள் வரும் மே மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து, கோவை சிறைத்துறை மைதானத்தில், தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் 1,98,000 சதுர அடியில், செம்மொழி பூங்கா வழியே காட்டூர் அருகே உள்ள அனுப்பர்பாளையத்தில் அமையவுள்ள பெரியார் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கான அடிக்கல்லை நாட்டினார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் சாமிநாதன், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+