எஜமானியை கடிக்க பாய்ந்த பாம்பு.. நொடி பொழுதில் வாலை இழுத்து காப்பாற்றிய நாய்.. நேர்ந்த துயரம் !
கோவை: கோவையில், எஜமானி வீட்டுக்குள் இரவு நேரத்தில் புகுந்த விஷம் நிறைந்த கண்ணாடி விரியன் பாம்பிடம் , போராடிய பொமரேரியன் நாய் பரிதாபமாக உயிரிழந்தது.
நாய் நன்றி உள்ள பிராணி. தன்னை காக்கும் மனிதர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதை கேட்டிருப்போம். பார்த்திருப்போம். சில சமயம் மனிதனுக்கு முதல் எதிரான மனிதனிடமும் இருந்தும், கடைசி எதிரான பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் வரை எல்லாவற்றையும எதிர்த்து போராடி உயிரையே விடக்கூடியவை.
அப்படியொரு சம்பவம் தான் கோவையில் நடந்துள்ளது . தனது எஜமான் வீட்டிற்கு புகுந்து அவரை கொத்த முயன்ற கண்ணாடி விரியன் பாம்பை வாலை பிடித்து இழுத்து கடித்துகொல்ல முயன்றது நாய். இதனால் ஆத்திரம் அடைந்த பாம்பு நாயை கண்டபடி கொத்திகொன்றது.

பொமரேரியன் நாய்
கோவை, ஜி.என்,மில்ஸ் , வைலட் கார்டன், யமுனா வீதியில் வசிப்பவர் சுரேந்தர், இவர், தன் வீட்டில் ,பொமரேரியன் நாய் வளர்த்து வந்தார், இதற்கு வயது 12 ஆகும், நேற்று இரவு, வீட்டுக்குள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அதிக விஷம்
அப்போது, அதிக விஷம் கொண்ட நான்கு அடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று, வீட்டுக்குள் நுழைய முயற்சித்தது. இதை பார்த்த நாய், பயங்கர சத்தத்துடன் குரைக்க ஆரம்பித்தது. சத்தம் கேட்டு, சுரேந்தரின் தாய் கதவை திறந்தார்.

காப்பாற்றிய நாய்
அப்போது, அந்த கண்ணாடி விரியன் பாம்பு பாய்ந்து சுரேந்தரின் தாயை கடிக்க பார்த்தது, உடனே அந்த நாய், பாம்பிடம் சண்டையிட்டது. காரின் இடுக்கில், பாம்பு நுழைந்தது. அதன் வாலை பிடித்து, நாய் இழுத்தது, உடனே பாம்பு,நாயின் கண் , காதில் கொத்தியது,இதில் , நுரைத்தள்ளி நாய் இறந்தது, இதை பார்த்த சுரேந்தர், அவரின் தாய், பாம்பு பிடிக்கும் குழுவிடம் தகவல் தெரிவித்தனர்.

குடும்பத்தினர் சோகம்
அவர்கள் உடனடியாக வந்து, பாம்பை பிடித்து, காட்டு பகுதிக்குள் விட்டனர், எஜமானியை காப்பாற்ற பாம்புடன் போராடி உயிரை விட்ட நாயின் சாவு, குடும்பத்தாரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது, இந்த சம்பவம் கோவை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications