பறந்த பிடிவாரண்ட்.. அவசர அவசரமாக ஆஜரான பாஜக ஏபி முருகானந்தம்.. கோவை நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
கோவை: வரதட்சணை விவகாரத்தில் ஆஜராகாமல் இருந்த பாஜக பொதுச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அவருடைய தந்தைக்கு கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இதையடுத்து அவசர அவசரமாக முருகானந்தம் நேரில் ஆஜராகி பிடியாணையை ரத்து செய்ய கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில் பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாஜக தமிழ்நாடு பொதுச் செயலாளராக செயல்பட்டு வருபவர் ஏ.பி.முருகானந்தம். இவருக்கும் கோவை மாவட்டம், மதுக்கரையை அடுத்த சாவடிபுதூரைச் சேர்ந்த சுந்தரசாமியின் மகள் ஞான சவுந்தரி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே ஞான சவுந்தரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வரதட்சணை கொடுமையால் தான் ஞான சவுந்தரி தற்கொலை செய்து கொண்டதாக ஏபி முருகானந்தத்தின் மீது புகார் எழுந்தது. மகள் உயிரிழப்பைத் தொடர்ந்து திருமணத்தின்போது ஏபி முருகானந்தத்திற்கு சுந்தரசாமி வரதட்சணையாக கொடுத்த தங்க நகைகள், நிலம், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் திரும்ப வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இப்பிரச்சினை தொடர்பாக சுந்தரசாமி சார்பில் ஏபி முருகானந்தம் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு கோவை கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஏபி முருகானந்தம் மற்றும் அவரது தந்தை ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், பாஜக பொதுச் செயலாளர் ஏபி முருகானந்தம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையிலும் ஏபி முருகானந்தம் மற்றும் அவரது தந்தை ஆஜராகாமல் இருந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 27 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்நிலையில், கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் பா.ஜ.க. பொதுச் செயலாளர் முருகானந்தம் நேரில் ஆஜராகி பிடியாணையை ரத்து செய்ய இன்று மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பிடியாணையை ரத்து செய்தது.
இதுதொடர்பாக பா.ஜ.க. பொது செயலாளர் முருகானந்தம் கூறுகையில், பத்திரிகைகளில் வெளியான செய்திகள் புனையப்பட்டவை. தனிநபர் ஒருவர் என் மீது தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கபட்டது. அதை ரத்து செய்யக் கோரி இன்று நீதிமன்றம் வந்தேன். நீதிமன்றம் பிடியாணையை ரத்து செய்து இருக்கின்றது என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications