கோவை அமிர்தா பல்கலைக்கழகம் யானை நடமாட்டத்தை தடுக்க மின்வேலி அமைத்துள்ளது.. ஐகோர்ட்டில் விளக்கம்
சென்னை: கோவை எட்டிமடையில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில் அமிர்தா விஸ்வ வித்யாபீட நிகர்நிலை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் யானைகள் நடமாட்டத்தை தடுக்கும் விதமாக நீண்ட மின்சார கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளது என்று ஐகோர்ட் அமைத்த நிபுணர்கள் குழு அறிக்கை தக்கல் செய்துள்ளது. யானை நடமாட்டத்தை தடுக்கும் விதமாக எந்த செயலும் செய்யக்கூடாது என்று வனத்துறையின் நிபந்தனையை மீறி மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கோவை எட்டிமடையில் மாதா அமிர்தானந்தமயி மடம் அமைந்துள்ளது. இங்கு அமிர்தா விஸ்வ வித்யாபீடம் (Amrita Vishwa Vidyapeetham) என்ற பெயரில் மிகப்பெரிய நிக்ர்நிலை பல்கலைக்கழகமும் உள்ளது. இந்த வளாகத்தில் ஆசிரமம், தியான மையங்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள் அடுத்தடுத்து மொத்தமாக உள்ளன. இந்த பல்கலைக்கழகம் மற்றும் மடம் ஆகியவை மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில் அமிர்தா விஸ்வ வித்யாபீட நிகர்நிலை பல்கலைகழக வளாகத்தில், 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு உரிய அனுமதியில்லாமல் நீண்ட மின்சார கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது. இதுபற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளீதரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நிபுணர்கள் குழுவுக்கு உத்தரவிட்டது. இதன்படியே நிபுணர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
யானைகளை தடுக்க மின்வேலி
அதில் கூறுகையில், "அமிர்தானந்தமயி கல்வி நிலையத்தை கடந்த செப்டம்பர் 6-ந்தேதி அன்று ஆய்வு செய்தோம். அமிர்தா விஸ்வ வித்யாபீட பல்கலைக்கழகம், வனப்பகுதியை ஒட்டி 3 கிலோ மீட்டருக்கு யானை வராமல் இருக்க அகழி மற்றும் மின்சார வேலி அமைத்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் சார்பில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க 3 தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு யானைகள் நுழைந்துள்ளன. மின்சார வேலி அமைத்துள்ளதால் யானைகளின் நடமாட்டம் தடுக்கப்பட்டு உள்ளன.
யானைக்கு பிடித்த வாழைத் தோப்பு
ஆனால், இந்த வேலியை அகற்றினால், நிலத்தின் அந்த எல்லை மீதான உரிமையை இழக்க நேரிடும் என்று பல்கலைக்கழகம் நிர்வாகம் அஞ்சுகிறது மேலும், அமிர்தா விஸ்வ வித்யாபீட பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான நிலத்தில் யானைக்களுக்கு மிகவும் பிடித்த வாழைப்பழங்களை கொண்ட வாழைத் தோப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
மின்வேலி அமைப்பு
இந்த கல்வி நிலையம் கட்டும்போது, யானை நடமாட்டத்தை தடுக்கும் விதமாக எந்த செயலும் செய்யக்கூடாது என்று வனத்துறை நிபந்தனை விதித்துள்ளது. தற்போது மின்வேலி அமைத்துள்ளது அந்த நிபந்தனையை மீறிய செயல் ஆகும். அதனால், அந்த மின்வேலியை அகற்ற வேண்டும்.
குடியிருப்பு கட்டியுள்ளது
அதுமட்டுமல்ல, வனப்பகுதி எல்லைக்கு மிக அருகில் ஊழியர்களின் குடியிருப்புகளை கல்வி நிறுவனம் கட்டியிருக்கிறது. இதுவும் நிபந்தனையை மீறிய செயல்தான். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையை படித்து பார்த்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.
-
கோவை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணுங்க.. ரயில்வே அப்டேட் -
வெள்ளியங்கிரி மலையில் மீண்டும் சோகம்.. முதல் மலையிலேயே மூச்சுத்திணறி பக்தர் உயிரிழப்பு! -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின்












Click it and Unblock the Notifications