கோவை + திருப்பூர் மாவட்ட மக்களுக்கு புதிய எச்சரிக்கை.. தீபாவளி வேற நெருங்குதே.. என்ன விஷயம் பாருங்க
கோவை: தீபாவளி நெருங்கும் நிலையில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு அணைகளும் நிரம்பும் நிலையை எட்டியுள்ளது. அதிலும் கோவை மாவட்டத்தில் உள்ள சில அணைகள் ஏற்கனவே நிரம்பிவிட்ட நிலையில், அருகே உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கடந்த சில நாட்களாக மேற்கு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

கோவை கனமழை: கோவையில் பெய்து வரும் கனமழையால் இந்த கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் உள்ள நீரின் அளவு அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளது. நீர்நிலைகள் நிரம்பும்போது அது ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் உரிய நேரத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடவும் நிவாரண முகாம்களை அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகிறது.
நிரம்பும் அணைகள்: கோவையைப் பொறுத்தவரை சோலையார் அணையின் மொத்த கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அங்கிருந்து நொடிக்கு 983 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதேநேரம் அணைக்கு இப்போது நீர்வரத்து 705 கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.. அந்த அணையில் அதிகபட்சம் 160 அடி வரை நீரைச் சேமித்து வைக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அது முழு கொள்ளளவை எட்டிவிட்டது.

அதேபோல் பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து 1,556 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 1,975 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.. அங்கு இப்போது நீர்மட்டம் தற்போது 71.54 அடியாக உள்ளது. அணையின் அதிகபட்ச கொள்ளளவு 72 அடியாகும்.
ஆழியாறு அணையைப் பொறுத்தவரை அதன் மொத்த கொள்ளளவு 90 அடியாக உள்ள நிலையில், அங்கு நீரின் அளவு 86.5 அடியாக உள்ளது. நீர் வரத்து நீர்வரத்து 595 கன அடியாக உள்ள நிலையில், நொடிக்கு 508 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
திருப்பூர் அணைகள்: திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணை கொள்ளளவு 60 அடியாக உள்ள நிலையில், அங்கு நீர் மட்டம் 54.63 அடியாக உள்ளது. நீர்வரத்து 667 கன அடியும், நீர் வெளியேற்றம் 573 கன அடியும் உள்ளது. அதேபோல அமராவதி அணைக்கு நீர்வரத்து 712 கன அடியும், நீர் வெளியேற்றம் 308 அடியாகவும் உள்ளது. நீரின் முழு கொள்ளளவு 90 அடியாக உள்ள நிலையில், இப்போது நீர் மட்டம் 86.5 அடியாக உள்ளது.
எச்சரிக்கை: ஏற்கனவே நீரின் அளவு அதிகமாக உள்ள நிலையில், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள ஒரு நகராட்சி, 2 பேரூராட்சிகள் உள்ளிட்ட உட்பட 71 உள்ளாட்சி அமைப்புகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என அஞ்சப்படும் நிலையில், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications