Coimbatore DDU-GKY: கோவையில் டிகிரி அல்லது பாதியிலேயே படிப்பை கைவிட்டவர்களுக்கு அரசின் சூப்பர் வாய்ப்பு
கோவை: கோவையில் டிரோன் ஆப்ரேட்டர், செல்போன் டெக்னீசியன், நர்சிங் பயிற்சி, ஜூனியர் சாப்ட்வேர் டெக்னாலஜி, வெப் டெக்னாலஜி உள்ளிட்ட பயிற்சிகள் இலவசமாக அரசால் அளிக்கப்பட உள்ளது. இதற்காகவே தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்துகிறது. இது தொடர்பாக கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பை பார்ப்போம்.
கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி திட்டம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தின் ஊரக பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு 20-க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளின் கீழ் 40 தொழில் பிரிவுகளில் குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சிக்கு பின் உரிய வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படும். இதில் டிரோன் ஆப்ரேட்டர், செல்போன் டெக்னீசியன், நர்சிங் பயிற்சி, ஜூனியர் சாப்ட்வேர் டெக்னாலஜி, வெப் டெக்னாலஜி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்கான பயிற்சி காலம் 3 முதல் 4 மாதங்கள் ஆகும். பயிற்சி காலத்தில் சீருடை, உணவு, தங்கும் இடம் வசதி, பாடப்புத்தகங்கள் ஆகிய அனைத்தும் எவ்வித கட்டணமும் இன்றி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி முடித்து பணியில் சேர்ந்தவுடன் மாதம் ரூ.1,270 வீதம் 6 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். விருப்பம் உள்ள இளைஞர்கள் தங்களது பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பவன்குமார் தெரிவித்து உள்ளார்.
தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி திட்டம் பற்றி சற்று விரிவாகவே பார்ப்போம்,
நம்ம ஊர்ல எவ்வளவோ பசங்க டிகிரி முடிச்சிட்டு அல்லது பாதியிலேயே படிப்பை விட்டுட்டு "என்ன பண்றது"ன்னு தெரியாம இருக்கிறார்கள்? அவங்களுக்காகவே கொண்டு வரப்பட்டதுதான் இந்த தீன் தயாள் உபாத்தியாய திட்டம்.
இந்தத் திட்டத்தோட உண்மையான நோக்கம் என்ன?
கிராமத்தில் இருக்குற ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு (15 முதல் 35 வயசு வரை) ஏதாவது ஒரு கைத்தொழிலைச் சொல்லிக்கொடுத்து, அவங்களை ஒரு நல்ல வேலையில உட்கார வைக்கணும்ங்கிறதுதான் இதோட முக்கியமான ஐடியாவாகும்.
இதுல என்னவெல்லாம் விசேஷம்?
முழுக்க முழுக்க இலவசம்: பயிற்சிக்கு ஒரு பைசா கூட நீங்க கட்டத் தேவையில்லை.
சாப்பாடு மற்றும் தங்குமிடம்: பயிற்சி நடக்குற இடத்துல தங்குறதுக்கும், சாப்பிடுறதுக்கும் அரசாங்கமே செலவை ஏத்துக்கும்.
கைநிறைய சம்பளம்: பயிற்சியை முடிச்ச கையோட, உங்களுக்கு ஒரு நல்ல கம்பெனியில வேலை வாய்ப்பையும் அவர்களே ஏற்படுத்திக் கொடுப்பார்கள்.
டிஜிட்டல் அறிவு: வெறும் வேலை மட்டும் சொல்லிக்கொடுக்காமல், கம்ப்யூட்டர் கற்பது, இங்கிலீஷ் பேசுறது, பேங்க் வேலைகளைப் பார்க்குறதுன்னு எல்லாத்தையும் 'பேக்கேஜ்' ஆகக் கத்துக்கொடுக்கிறார்கள்.
யாருக்கெல்லாம் முன்னுரிமை?
இதில் மிக அற்புதமான விஷயம் என்னன்னா, சமூகத்துல பின்தங்கியிருக்கிற எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 50% இடமும், சிறுபான்மையினருக்கு 15% இடமும், குறிப்பா பெண்களுக்கு 33% இடமும் ஒதுக்குறாங்க. அதாவது, "யாரையும் விட்டுடக்கூடாது"ங்கிறதுல அரசு தெளிவாக இருக்கிறது. இந்ததிட்டத்தில் சேரும் வாய்ப்பு கிடைத்தால் மிஸ் பண்ண வேண்டாம்
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications