Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதநல்லிணக்கம்! 3 மத குருமார்கள் தலைமையில் நடந்த கோவை டிஎஸ்பி மகள் திருமணம்.. குவியும் பாராட்டுகள்!

Subscribe to Oneindia Tamil

கோவை: 3 மத குருமார்கள் மத்தியில் மகளின் திருமணத்தை நடத்தும் கோவை டிஎஸ்பி வீட்டு திருமண பத்திரிகை சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எம்மதமும் எங்களுக்கு சம்மதம்.. பழகுவதற்கு கூட ஜாதி பார்த்து சிலர் பழகுவார்கள். வீட்டுக்கு அழைத்து வருவதில் ஜாதி, அவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதில் ஜாதி... என ஜாதி வெறியில் திளைத்திருப்பார்கள்.

Coimbatore DSP conducted his daughter marriage in front of 3 religion priests

கோயில், மசூதி, சர்ச் ஆகிய மூன்று இடங்களில் தெய்வங்கள் ஜாதி, மத, பேதமின்றி அருள்பாலிக்கிறார்கள். ஆனால் சிலர் மனிதர்கள்தான் ஜாதி, மதத்தை பார்த்து அந்த புனித தலங்களுக்கு மாறி கூட செல்ல மாட்டார்கள்.

அதிலும் ஜாதி விட்டு ஜாதி மதம் விட்டு மதம் என காதல் திருமணம் என வந்துவிட்டால் போதும். வெட்டுக் குத்துதான்! அந்த நேரத்தில் மகள், மகன், அக்கா, தம்பி என்ற எந்த உறவுகளும் கண்களுக்கு தெரியவே தெரியாது. கையில் கிடைக்கும் பொருளாள் கொன்றுவிடுவார்கள். இன்னும் சிலர் கலப்பு திருமணத்திற்கு ஒப்புக் கொள்வது போல் இருந்து பின்னர் அவர்கள் கொல்வதும் நடக்கிறது.

சரி கண்காணாத இடத்தில் போய் வாழலாம் என சென்றாலும் அவர்களை நிம்மதியாக வாழவிடுவதில்லை. இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி தனது மகளுக்கு மூன்று மத குருமார்களையும் அழைத்து திருமணம் செய்து வைக்கும் திருமண அழைப்பிதழ் வைரலாகி வருகிறது.

தமிழக காவல் துறையில் கோவை மாவட்ட குற்ற ஆவணக் காப்பக துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் வெற்றிச் செல்வன். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்ஐசி எனப்படும் மதம் சார்ந்த பிரச்சினையை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றி வந்தார். காவல் துறையில் எஸ்ஐசி அமைப்பில் பணியாற்றிய வெற்றிச் செல்வன் மதம் சார்ந்த பிரச்சினைகளை சிறப்பாக கையாண்டார்.

அது போல் மதம் சார்ந்த பிரச்சினைகளுக்கு சுமூகமாக தீர்வு கண்டார். கலவரங்கள் ஏற்படும் சூழலில் துரிதமாக செயல்பட்டு அவற்றை கட்டுப்படுத்தியதற்காகவும் தடுத்து நிறுத்தியதற்காகவும் இவர் குடியரசுத் தலைவர் விருதையும் அண்ணா விருதையும் பெற்றுள்ளார். இவர் மகள் நிஷாந்தினி. இவர் முனைவர் பட்டம் படித்து வருகிறார். இவருக்கு நெல்லையைச் சேர்ந்த சுதர்சன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இன்று நடந்த இந்த திருமணத்தில் இவர்களுடைய பத்திரிகை வைரலாகி வருகிறது. அதாவது இந்த திருமணத்தை மும்மதங்களைச் சேர்ந்த மதகுருமார்கள் முன்னிலையில் நடத்த முடிவு செய்துள்ளார். அதன்படி பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார், கவுமார் மடாலயம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், கோவை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ், போத்தனூர் மஜ்ஜிதே இப்ராஹிம் சுன்னத் ஜமாஅத் இமாம் அப்துல் ரஹீம் இம்தாதிபாகவி ஆகியோர் பெயர்களை தனது மகளின் திருமண அழைப்பிதழில் அச்சிட்டுள்ளார் வெற்றிச் செல்வன்.

மும்மதங்களை சேர்ந்த குருமார்களின் பெயர்களும் இருக்கும் அந்த பத்திரிகையில் உடம்பொடு உயிரிடை என்னமற்றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு என்ற திருக்குறளும் அச்சிடப்பட்டுள்ளது. இன்று திருமணம் நடந்த நிலையில் நாளை வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+