கோவைதான் அடுத்த டாப் சிட்டி.. அடித்து முன்னேற போகிறது பாருங்க.. சர்வதேச நிறுவனம் அசத்தல் கணிப்பு!

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: லக்னோ, கொச்சி, ஜெய்ப்பூர் மற்றும் புவனேஸ்வர் ஆகியவை ரியல் எஸ்டேட் துறையில் வளர்ந்து வரும் 10 நகரங்களாக உருவெடுத்து உள்ளதாக CREDAI மற்றும் Cushman & Wakefield நிறுவனங்களின் அறிக்கை தெரிவித்துள்ளது.

ரியல் எஸ்டேட் அமைப்பான CREDAI மற்றும் ரியல் எஸ்டேட் ஆலோசகர் நிறுவனமான குஷ்மேன் & வேக்ஃபீல்ட் ஆகியவைஎகிப்தில் உள்ள 21வது NATCON இல் 'இந்தியாவின் அடுத்த 10 வளர்ந்து வரும் சந்தைகள்: வணிக ரியல் எஸ்டேட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான நிறுவனங்கள்' என்ற அறிக்கையை வெளியிட்டன.

Coimbatore going Global; Cushman & Wakefield’s next 10 emerging markets in India

இதில்தான் இந்த 10 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் இருந்து ரியல் எஸ்டேட் துறையில் வளர்ந்து வரும் அடுத்த பெரிய நகரம் கோயம்புத்தூர்தான் என்று இந்த ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது .

🔸 இந்தூர்
🔸கொச்சி
🔸திருவனந்தபுரம்
🔸கோயம்புத்தூர்
🔸லக்னோ
🔸விசாகப்பட்டினம்

🔸சூரத்

🔸வதோதரா
🔸நாக்பூர்
🔸நாசிக்

ஆகியவை இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ள நகரங்கள் ஆகும்.

வளரும் கோயம்புத்தூர்: ஜனவரி 2024-இல் தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இதில் பல முக்கியமான முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தமிழ்நாடு பட்ஜெட்டை முன்னாள் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அவர் தனது பட்ஜெட்டில் பல்வேறு முக்கியமான விவரங்களை வெளியிட்டார். முக்கியமான சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி ரூ100 கோடியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். இதனால் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவித்து இருந்தார். தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

Coimbatore going Global; Cushman & Wakefield’s next 10 emerging markets in India

பெருகும் முதலீடு: மிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில்தான் இந்த முறை சென்னையில் மட்டுமின்றி கோவையிலும் பல்வேறு முக்கிய முதலீடுகள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

2024 TN Global Investor கூட்டத்திற்கு முன்னதாக பெரிய MNC நிறுவனங்களிடமிருந்து 2,000 கோடி முதலீடுகளை கோயம்புத்தூர் பெற உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் 48 MSME களில் இருந்து 571 கோடி முதலீடுகளையும் கோவை பெற வாய்ப்புள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கும் முன் செய்யப்பட உள்ள ஒப்பந்தங்கள் ஆகும். மாநாடு நடக்கும் நாளில் இதை விட பெரிய அளவில் முதலீடுகள் குவியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2 வருடங்களாகவே கோவையில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. அங்கே தொழில் செய்வதற்கு ஏதுவான சூழல் உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. இதற்கு முன்பாக கடந்த வருடம் ஜூலை மாதம் தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்த மாநாடு நடைபெற்றது. மொத்தம் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதில் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலம் 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளன. அப்போதும் கோவையில் அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+