கோவை அரசு பஸ்ஸில் யார்னு பாருங்க.. டக்குனு கால் மேல கால் போட்டு.. பொள்ளாச்சி ரோட்டில் அலறிய 40 பேர்
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் இந்த பஸ் டிரைவர் தந்த அலப்பறையால், 40 பயணிகளும் உச்சக்கட்ட பீதிக்கு சென்றுவிட்டனர்.. இது தொடர்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் அத்தனை பேரும் கோரிக்கை விடுத்த நிலையில், துறை ரீதியான நடவடிக்கை, அரசு பஸ் டிரைவர் மீது எடுக்கப்பட்டுள்ளது.. என்ன நடந்தது பொள்ளாச்சி ரோட்டில்?
எப்போதுமே பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதில் நம்முடைய தமிழக போக்குவரத்து துறை மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.. இதற்காகவே சிரத்தையுடன் பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. பஸ் டிரைவர்களுக்கும், கண்டக்டர்களுக்கும், போக்குவரத்து துறை அடிக்கடி அறிவுரைகளையும் வழங்கி வருகிறது.

ஆனால், ஒருசில டிரைவர்கள், ஒரு கையில் செல்போனில் பேசிக்கொண்டே மறு கையில் பஸ்சை ஓட்டுவதுமாக இருக்கிறார்கள்.. இப்படி டிரைவர்கள் யாராவது பொறுப்பற்ற முறையில் பஸ் ஓட்டுவது தெரிந்தால், பஸ்ஸிலுள்ள பயணிகளே இதை வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு விடுகிறார்கள்.
சஸ்பெண்ட் நடவடிக்கை
இந்த வீடியோக்கள் வைரலானதுமே, இதுகுறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இறுதியில் சம்பந்தப்பட்ட டிரைவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.. அரசு பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என்று போக்குவரத்துத்துறை பலமுறை எச்சரித்து, செய்திக்குறிப்பையும் வெளியிட்டிருக்கிறது. எனினும், ஒருசில டிரைவர்கள் இதை அலட்சியப்படுத்தி விடுகிறார்கள்.
இதோ பொள்ளாச்சியில் ஒரு அக்கிரமம் நடந்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து TN 67 N 1548 என்ற ஒரு அரசு பஸ், 40 பயணிகளுடன் சிவகாசிக்கு கிளம்பியது..
பஸ் டிரைவர் அருள்மூர்த்தி
மதியம் 1.30 மணிக்கு பஸ் புறப்பட்டதிலிருந்தே, பஸ் டிரைவர் அருள்மூர்த்தி (50 வயது), திடீர் திடீரென்று பஸ்ஸை வேகமாக ஓட்டியிருக்கிறார்.. பிறகு ஆளே இல்லாத சாலையில் சத்தமாக ஹாரன் அடித்துக்கொண்டு, மெதுவாக மாட்டு வண்டியை போல ஓட்டியிருக்கிறார்.
மீண்டும் பஸ்ஸை வேகமாக ஓட்டியிருக்கிறார்.. இதனால் பயணிகள் அனைவரும், டிரைவர் மூர்த்தியையே குழப்பத்துடனும், பீதியுடனும் கவனித்தனர்.. அப்போது டிரைவர் திடீரென கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஆட்டோ ஓட்டுவது போல பஸ்ஸை ஓட்டியிருக்கிறார்.. அப்போதுதான் பஸ் டிரைவர் மூர்த்தி போதையில் இருக்கிறார் என்பது பயணிகளுக்கு தெரியவந்தது..
அவரது கையில் ஒரு வாட்டர்பாட்டில் இருந்துள்ளது.. அந்த தண்ணீர் பாட்டிலில் மது கலந்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு, தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டை கசக்கி வாயில் போட்டுக் கொண்டு மறுபடியும் பஸ்ஸை தாறுமாறாக ஓட்டினார்.. இதனால் உச்சக்கட்ட பீதியடைந்த பயணிகள், டிரைவரிடம் சென்று பஸ்ஸை நிறுத்த சொல்லியிருக்கிறார்கள்..
வாட்டர் பாட்டில் தண்ணீர்
ஆனால், யார் பேச்சையும் டிரைவர் மூர்த்தி கேட்கவில்லையாம்.. பிறகு கோமங்கலம் டோல்கேட் அருகில் பயணிகள் பஸ்ஸை நிறுத்த வைத்தனர்.. கண்டக்டர் வெங்கடேசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோமங்கலம் போலீசுக்கும் தகவல் தந்தனர்.. ஆனால், போதை தலைக்கேறிய நிலையில், பஸ்ஸை ரோட்டோரமாக நிறுத்திவிட்டு, ஸ்டீயரிங் மீது தலையை வைத்து குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்துவிட்டாராம். இதனால் பயணிகள் அனைவரும் கொந்தளித்து போனார்கள்.. இதனை வீடியோவாகவும் எடுத்தனர்..
டியூட்டி நேரத்தில் மதுபோதையில பஸ்ஸை ஓட்டியது, ஹான்ஸ் பாக்கு வாயில் திணித்து பஸ்ஸை ஓட்டியது, அளவுக்கு அதிகமான வேகத்தில் பஸ்ஸை ஓட்டியது போன்றவைகளை செய்து தங்களை அச்சமடைய செய்துவிட்டதாக கூறி, பயணிகள் ஆவேசமானார்கள்..
விசாரணை - குடிபோதை
அதற்குள் கோமங்கலம் போலீசார் விரைந்து வந்து பயணிகளை வேறு ஒரு பஸ்ஸில் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.. பிறகு டிரைவரை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால், கோவை போக்குவரத்துக் கழகத்தில் இது தொடர்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
டிரைவர் அருள்மூர்த்தியை கோலார்பட்டி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில் அவர் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, போலீசார் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி டிரைவர் அருள்மூர்த்தியை பணியிடை நீக்கம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications