இந்திய அளவில் NO 1... இரண்டு வருடங்களில் இவ்வளவு திட்டங்களா? 100% ஸ்மார்ட் சிட்டியான கோவை
கோவை: இந்த திராவிட மாடல் ஆட்சியில் அதிரடியான வளர்ச்சியைப் பெற்று உலகத் தரத்திற்கு உயர்ந்திருக்கிறது கோவை மாநகரம். அது மட்டும் அல்ல; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காகத் தேசிய அளவில் முதல் பரிசைத் தட்டி சென்றுள்ளது கோவை.
தமிழ்நாட்டின் 2வது மிகப் பெரிய நகரமான கோவையைத் தரம் மிக்க மாநகரமாக மாற்றி இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். 9 ஆயிரம் கோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்து கோவைக்கு மெட்ரோ சேவையைச் செய்து தந்துள்ளார்.

அதற்கான பணிகள் தற்போது மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. ஸ்டாலின் ஆட்சியில், இப்படி தமிழக அளவில் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் கோவை எந்தளவுக்கு உயர்ந்துள்ளது?
பலரிடம் பேசினோம்.
"கோவை மாநகரம் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் இந்திய அளவில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல் மாவட்ட அளவில் எடுத்துக்கொண்டால், முதல் இடத்தைப் பிடித்துள்ளது கோவை. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திற்கான பணிகள் வெறும் 40% தான் நிறைவடைந்திருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் 100% பணிகள் நிறைவடைந்துள்ளன.

கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் தமிழ் உயிர் எழுத்துகள் அனைத்தும் வைத்து தமிழர் விழாவான பொங்கல் பண்டிகையைப் பிறதிப்பலிக்கும் வகையில் நடைபாதை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. டி.பி சாலையில் கோவை மாநகராட்சியாக உருவாவதற்கு அரும்பாடு பட்ட தலைவர்களின் உருவங்களை டிஜிட்டல் திரை வடிவில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

இவை மட்டுமல்ல; மேற்கு புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க, சுமார் 600 கோடி ரூபாய் செலவில் மூன்று கட்டங்களாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்கிறார் கோவை மாநகராட்சி துணை மேயர் ஆர்.வெற்றிச்செலவன்.

திமுக பொறியாளர் அணியின் மாவட்ட அமைப்பாளர் பாபு, "கலைஞர் மு.கருணாநிதி ஆட்சிக்காலத்தில்தான் கோவைக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை வழங்கினார். அது இங்குள்ள இளைஞர்களுக்கு மாபெரும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.

முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அன்ன நடை போட்டுவந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. அதைப்போல் பில்லூர் குடிநீர் மூன்றாம் கட்ட திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, ஏறக்குறைய முடிவடையும் தறுவாயை அடைந்துள்ளன. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள மூன்று பகுதிகளைக் கண்டறிந்து மூன்று மேம்பாலங்கள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த ஆட்சிக்காலத்தில்தான் கோவைக்கு டைடல் பார்க் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் ஆட்சியில் ஒரு டைடல் பார்க் வந்தது. இப்போது 2வது டைடல் பார்க் கிடைத்திருக்கிறது. இது பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டமாக மாறி இருக்கிறது.

முன்பு இம்மாவட்ட இளைஞர்கள் தொழில்நுட்ப துறைக்கு வேலைக்குப் போகவேண்டும் என்றால் கர்நாடகா போவார்கள்; இல்லையெனில் சென்னை வருவார்கள். இனி அவர்கள் கோவையிலேயே படித்துவிட்டு வேலை பார்க்க முடியும்.

2009 இல் சிங்காநல்லூர் பகுதியில் தொடங்கப்பட்ட ஒரு மேம்பாலப் பணியை அதிமுக ஆட்சியில் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. எந்தப் பணிகளையும் அவர்கள் செய்யவில்லை. திமுக ஆட்சி வந்ததும் மீண்டும் அதை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டுசென்றோம். அதற்காக நிதியை உடனடியாக அவர் ஒதுக்கினார். இப்போது பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன" என்கிறார்.

கோவை மாநகராட்சி பணிகள் குழுத் தலைவர் சாந்தி முருகன், "கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் கோவையில் சாலை வசதியைச் செய்து தரவே இல்லை. குண்டும் குழியுமாகவே காட்சி அளித்தது. இப்போது முதல்வர் ஸ்டாலின் கோவை சாலைப் பணிகளுக்காக சுமார் 450 கோடி நிதியை ஒதுக்கித் தந்தார். அந்த நிதியில் கோவையில் புதிய தார்ச்சாலைகளை அமைத்துக் கொடுத்துள்ளோம்" என்கிறார்.

கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஐஏஎஸ், "முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் 63 சுகாதார நிலையங்களைக் கோவைக்கு அறிவித்தார். அதில் 45 மையங்களை முதல்வரே திறந்துவைத்துவிட்டார். மீதம் உள்ளவற்றின் பணிகள் நிறைவடைய உள்ளன.

கடந்த 2 ஆண்டுகளில் குளக்கரை பகுதிகளில் எல்.இ.டி மின்விளக்குகள், இரவு நேரங்களில் வண்ண ஒளிகளை உமிழும் மின் விளக்குகள், அதைப் போன்ற நகரச் சாலைகளைத் தரம் உயர்த்தி செம்மை செய்து என 990 கோடி மதிப்பில் 54 விதமான திட்டங்களைச் செய்து தந்துள்ளோம்.

இதற்காகத் தேசிய அளவில் கோவை மாநகராட்சிக்கு ஒன்றிய அரசு முதல் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது. இந்தப் பெருமை எல்லாம் முதல்வர் ஸ்டாலினையே போய்ச் சேரும்" என்கிறார்.

"போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதத்தில் கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் 9 ஆயிரம் கோடி செலவில் கோவையில் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக நிதியை வழங்கி இருந்தார்.

அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி இப்போது விரைவாக நடைபெற்று வருகின்றன. இதற்கு முன்னதாக 50 இடங்களில் மேம்பாலங்கள் கோவையில் கட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் திமுக ஆட்சியில் கட்டப்பட்டவை" என்கிறார் கோவை மாநகர் திமுக மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக்.





-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications