பேபி கார்னில் 'கூல் லிப்'.. அதிர்ந்து போன கோவை! சுற்றி சுற்றி ரெய்டு விட்ட உணவு பாதுகாப்புத்துறை
கோயமுத்தூர்: கோவையில் குழந்தைக்காக ஆர்டர் செய்த உணவில் புகையிலை போதை பொருள் (கூல் லிப்) இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஓட்டலில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சமீப காலமாக ஓட்டல் உணவுகளின் தரம் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகி வந்திருக்கிறது. இது உடல் உபாதைகளை கடந்து சில நேரங்களில் உயிரையும் கூட பறித்திருக்கிறது. ஷவர்மா சாப்பிட்டவருக்கு வாந்தி மயக்கம், பிரியாணி சாப்பிட்டவர் பரிதாப பலி என தொடர்ச்சியான செய்திகள் ஓட்டல் உணவுகள் குறித்த அச்சத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் இந்த வரிசையில் மற்றொரு சம்பவமும் அரங்கேற்றியுள்ளது.

அதாவது கோவையின் கவுன்டம்பாளையம் பகுதியில் சாய்பாபா காலணியில் 'கோவை கீதா' எனும் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த கோவையில் உள்ள சில நல்ல ஓட்டல்களில் இதுவும் ஒன்று என சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில் இன்று மதியம் இதே பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் இந்த ஓட்டலில் உணவை ஆர்டர் செய்திருக்கிறார். ஒரு காம்போ மீல் மற்றும் பேபி கார்ன் என்பதுதான் ஆர்டர்.
உணவு விநியோக ஆப் மூலமாக செய்யப்பட்ட ஆர்டர் சரியான நேரத்திற்கு வீட்டிற்கு வந்திருக்கிறது. வீட்டில் உள்ள குழந்தைக்கு கார்னை ஊட்ட தொடங்கிய அப்பெண் சிறிது நேரத்தில் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம் பேபி கார்ன் உணவில் வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமாக ஏதோ இருந்திருக்கிறது. அதை எடுத்து பார்த்தபோதுதான் கூல் லிப் எனப்படும் தடை செய்யப்பட்ட போதை பொருள் என்பது தெரிய வந்திருக்கிறது.
உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்த அவர், இது தொடர்பாக வீடியோவை பதிவு செய்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகாரையும் அனுப்பியுள்ளார். கூல் லிப் விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த கோவையையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
ஒரு பக்கம் உணவின் தரம் பிரச்சனை எனில் மறுபக்கம் தடை செய்யப்பட்ட போதை பொருள் எப்படி உணவில் வந்தது என்பது சர்ச்சையாக வெடித்திருக்கிறது. கோவை என்பது சென்னைக்கு பிறகு வேகமாக வளர்ந்து வரும் நகரமாக இருக்கிறது. தொழிற் வளர்ச்சியின் வேகத்தை போலவே போதைப் பொருட்களின் பயன்பாடும் அதிகமாக இருப்பதாக தொடர் புகார்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு பெரியநாயக்கன்பாளையம் அருகே சுமார் 16 கிலோ அளவுக்கு போதை சால்லேட்டுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டது.
ஆகே போதை சாக்லேட்டே தடையின்றி கிடைக்கும் நிலையில், கூல் லிப் எப்படி கிடைக்காமல் இருக்கும்? என்கிற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே கூல் லிப் போன்ற போதை பொருட்கள் அதிகம் கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படிதான் ஆர்டர் செய்யப்பட்ட உணவிலும் கூல் லிப் வந்திருக்கும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. எனவே இந்த போதை பொருட்கள் தடை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications