கலைந்திருந்த ஆடை.. பெண் விமான படை அதிகாரி பலாத்காரம்.. லெப்டினன்ட் அதிகாரிக்கு செப்.30 வரை காவல்
விமான படை பெண் அதிகாரி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்
கோவை: கோவையில் பயிற்சிக்கு வந்த விமான படை பெண் அதிகாரியை பலாத்காரம் செய்தது தொடர்பாக, அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு செப்டம்பர் 30-ம்தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video
கோவை ரெட்பீல்டில் விமான படை பயிற்சி கல்லூரி உள்ளது... இந்த கல்லூரியில் நாடு முழுவதும் இருந்து விமான படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம்.
அப்படித்தான் கடந்த மாதம் 15 ம் தேதி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விமானபடையில் பிளைட் லெப்டினன்ட் அந்தஸ்தில் இருக்கும் 30 அதிகாரிகள் பயிற்சிக்காக வந்திருக்கிறார்கள்..

விருந்து
இவர்களில் ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் கல்லூரி வளாகத்திலேயே தங்குவதற்காக அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. இப்படி பயிற்சி பெற வந்தவர்களில் ஒரு பெண் அதிகாரியும் அடக்கம்... அவருக்கு 28 வயதாகிறது.. டெல்லியை சேர்ந்தவர்.. இந்நிலையில் கடந்த 10-ம்தேதி விமான படை அலுவலகத்தில் மதுவிருந்தும் நடந்துள்ளது. அந்த விருந்தில் பெண் அதிகாரி கலந்து கொண்டுள்ளார்.

மைதானம்
பிறகு அன்றைய தினமே மைதானத்தில் கூடைப்பந்து விளையாடியும் உள்ளார். அப்படி விளையாடியபோது, அவரது காலில் திடீரென காயம் ஏற்பட்டுவிட்டது.. அதனால் வலி பொறுக்க முடியாமல் அவதிப்பட்ட நிலையில், அவரால் நடக்கவும் முடியவில்லை.. எனவே, விமான படை ஆபீசில் உள்ள தன்னுடைய ரூமுக்கு சென்றார்... அங்கே வலி நிவாரண மாத்திரை சாப்பிட்டுவிட்டு, கொஞ்ச நேரத்தில் தூங்கி விட்டார்...

பலாத்காரம்
பிறகு எழுந்து பார்த்த பிறகு, அவரது ஆடை களையப்பட்டிருந்தது தெரியவந்தது.. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தூக்கத்தில் என்ன நடந்தது? என்பதுகூட தெரியாமல் பதறினார்.. அவரை அங்கு பயிற்சிக்காக வந்திருந்த அமித்தேஸ் என்பவர் பலாத்காரம் செய்து விட்டதாக தெரிகிறது.. அமித்தேஸ் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்.. 30 வயது அதிகாரியாம்..

என்ன நடந்தது?
விமான படை அலுவலகத்தில் விருந்து நடந்துள்ளது.. அந்த விருந்தில் பங்கேற்றபோது சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியுடன் பேசியுள்ளார்... பிறகு அவர் ரூமுக்கு செல்வதை பார்த்து பின்னாடியே சென்றுள்ளார்.. பெண் அதிகாரி கதவை உள்பக்கமாக தாழ்ப்பாளும் போடவில்லை என தெரிகிறது.. இதை பயன்படுத்தி கொண்டு, அமித்தேஸ் நைஸாக உள்ளே புகுந்து, பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது...

விசாரணை
சம்பவம் நடந்து மறுநாள் காலை சக பெண் விமான படை அதிகாரிகள் பெண் அதிகாரியை பார்க்க வந்த போது அங்கு அமித்தேஸும் இருந்ததாகவும், அவர்கள் பெண் அதிகாரியை எழுப்பிய பின்னரே பாலியல் வன்கொடுமை செய்து இருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோரை சந்தித்து புகார் அளித்தார்...

ஒருநாள் காவல்
இந்த புகாரின் பேரில் கோவை மத்திய பகுதி மகளிர் போலீசாரும் விசாரணை நடத்தினர்... இறுதியில் அமித்தேஸ் கைது செய்யப்பட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்... அப்போது விமான படை அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு எந்தவிதமான அதிகாரமுமில்லை என்று அமித்தேஸ் தரப்பில் வாதிடப்பட்டது.. இதை விசாரித்த நீதிபதி, ஒரு நாள் மட்டும் அமித்தேஸை காவலில் வைக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படியே அமித்தேஸ் உடுமலையில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

பரபரப்பு
இதனிடையே, கோவை காவல் துறையினரின் நடவடிக்கைக்கு இந்திய விமான படை முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும், பிளைட் லெப்டினன்ட் அமிர்தேஷ் மீது குழு அமைத்து துறை ரீதியான விசாரணை நடத்தப்படுவதாகவும் இந்திய விமான படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.. இந்நிலையில், பாலியல் வன்கொடுமை செய்த விமானப்படை அதிகாரி அமித்தேஸ் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்கள்.. குடும்ப வன்முறை தடுப்பு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி உள்ளிட்டோரும் ஆஜரானதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், விமானப்படை அதிகாரிக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. விமானப்படை அதிகாரியின் காவலை செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications