கோவையை அலறவிட்ட "தலைகாணி".. தள்ளுவண்டி கடையில் மலர்ந்த கள்ளக்காதல்.. கோயம்புத்தூரை இப்படியொரு பெண்
கோவை: கோவையை கதிகலங்க விட்டுள்ளார் லாவண்யா.. யாரிந்த பெண்? என்ன நடந்தது கோவையில்?
கோவை வடவள்ளி அருகே உள்ளது சோமையம்பாளையம்... இங்கிருக்கும் காளப்பநாயக்கன்பாளையம் பிரிவை சேர்ந்தவர் பிரபு.. 40 வயதாகிறது.. இவர் லேத் ஒர்க் ஷாப் தொழிலாளி. மனைவி பெயர் லாவண்யா.. 33 வயதாகிறது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.

லாவண்யாவும், அவரது மாமியார் கலாவதியும் சேர்ந்து தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வந்தார்கள்.. இந்நிலையில், உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த பிரபு, சமீப நாட்களாகவே வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
மாமியார் கடை: நேற்று முன்தினம் டிபன் கடையிலிருந்து லாவண்யா வீட்டிற்கு வந்தபோது, பிரபு மயங்கி விழுந்து கிடப்பதை பார்த்து பதறிப்போய், மாமியாருக்கு தகவல் சொன்னார்.. மாமியாரும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பிரபுவின் கழுத்தில் காயம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.. இதனால் உடனடியாக வடவள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசாரும் இது சம்பந்தமான விசாரணையை நடத்தியபோதுதான், லாவண்யாவின் லீலைகள் அம்பலமாயின.
அதாவது லாவண்யா நடத்தி வரும் டிபன் கடைக்கு பக்கத்திலேயே ஒரு தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பைரே கவுடா என்ற 40 வயது நபர் வேலை பார்த்து வருகிறார். கவுடா அடிக்கடி லாவண்யா கடைக்கு வந்து டிபன் சாப்பிட்டு விட்டு செல்வாராம்.. அப்போதுதான் லாவண்யாவுக்கும், கவுடாவுக்கும் கள்ளக்காதல் ஆரம்பமாகியிருக்கிறது. இவர்கள் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால், இந்த விவகாரம் பிரபுக்கு தெரிந்ததுமே கொந்தளித்துள்ளார்..
கண்டிப்பு: இனிமேல் டிபன் கடைக்கு செல்ல வேண்டாம் என்றும், தன்னுடைய அம்மா மட்டும் கடையை கவனித்து கொள்ளட்டும் என்றும் கண்டிப்புடன் கூறியிருக்கிறார். இதனால் வீட்டிலேயே அடைபட்ட லாவண்யா, கவுடாவை பார்க்காமல் தவித்து வந்துள்ளார். இறுதியில் கணவனை கொலை செய்யவும் முடிவு செய்தார். சில நாட்களுக்கு முன்பு, பிரபுவுக்கு, விஷம் கலந்த உணவை தந்துள்ளார். அந்த உணவை சாப்பிட்ட பிரபுவுக்கு உடல்நிலை மோசமாகியிருக்கிறது.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபுவுக்கு தீவிர சிகிச்சையும் நடந்தது.. இதில் பிரபு உயிர் பிழைத்துவிட்டார்.. இதற்கு பிறகுதான் வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். விஷம் வைத்தும் கணவன் சாகவில்லையே என்று கவலைப்பட்ட லாவண்யா, மறுபடியும் கொலை செய்ய முடிவு செய்தார்.
மாமியார்: சம்பவத்தன்று டிபன் கடைக்கு சென்று மாமியாருக்கு உதவி செய்தார் லாவண்யா. பிறகு வீட்டிற்கு சென்று கணவரை கவனிப்பதுபோல் நாடகமாடிவிட்டு, கள்ளக்காதலனை அழைத்துள்ளார்..
அப்போதுதான், மாத்திரை, மருந்து சாப்பிட்ட பிரபு சோர்வாக படுத்திருந்தார்.. வீட்டிற்குள் நுழைந்த கவுடா படுத்திருந்த பிரபுவின் கழுத்தை, டவலால் இறுக்கினார்.. இதில் அதிர்ச்சியடைந்த பிரபு கை, கால்களை உதைத்து சத்தம் போட்டார்.. உடனே லாவண்யா கணவரின் முகத்தை தலையணையால் அமுக்கினார்.. சிறிது நேரத்திற்கெல்லாம் துடிதுடித்தே இறந்துபோனார் பிரபு.. இதில், பிரபுவின் உயிர் பிரியும்வரை, தலையணையால் முகத்தை அமுக்கி கொண்டேயிருந்தாராம் லாவண்யா.
பரபரப்பு: இவ்வளவும் போலீசார் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, கள்ளஜோடியை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications