கோவை லாட்ஜ்ஜில் யாரிந்த பெண்? சுவற்றில் "பதிந்த" முகம்.. தட்டுத்தடுமாறி தறிகெட்ட கோயம்புத்தூர் ஜோடி
கோவை: கோவை லாட்ஜ்ஜில் தங்கியிருந்த ஜோடி யார்? அந்த இளம்பெண் யார்? என்பது குறித்த விசாரணையை போலீசார் தீவிரமாய் நடத்தியிருக்கிறார்கள். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
கோவை அருகே சின்னியம்பாளையம் பகுதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி ஒன்றில் இளம்பெண் அடித்துக் கொலைச் செய்யப்பட்து தொடர்பாக காதலனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அடித்துக் கொன்றதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அருகே உள்ளது சின்னியம்பாளையம்.. இங்குள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில், 2 நாட்களுக்கு முன்பு, இளைஞர் ஒருவர் பெண்ணுடன் வந்துள்ளார்.. அன்றைய தினம் இங்கேயே தங்கிவிட்டு, நேற்றுமுன்தினம் விடிகாலை அந்த இளைஞர் மட்டும், லாட்ஜை விட்டு அவசர அவசரமாக வெளியேறினார்..
சந்தேகம்: இளம்பெண் இல்லாமல், இந்த நபர் மட்டும் ரூமை விட்டு, அதுவும் விடிகாலையில், அவசரமாக வெளியேறியதை பார்த்து, லாட்ஜ் ஊழியர்களுக்கு சந்தேகம் வந்தது.. அதனால், உடனே அவர் தங்கியிருந்த ரூமுக்கு சென்று பார்த்தனர்.. அப்போது, அங்கே இளம்பெண், சடலமாக விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ந்தனர்.. அந்த பெண்ணின் முகமெல்லாம் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
எனவே, இது குறித்து உடனடியாக பீளமேடு போலீசுக்கு, லாட்ஜ் ஊழியர்கள் தகவல் தந்தார்கள்.. போலீசாரும் விரைந்து வந்து, லாட்ஜில் விசாரணை நடத்தி, அந்த பெண்ணின் சடலத்தையும் மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். அதேசமயம், லாட்ஜில் வந்து தங்கிய நபரின் அடையாளங்களை வைத்து, அவரை போலீசார் தேடிவந்தனர்.

லாட்ஜ் பெண்: அப்போதுதான், நேற்றைய தினம் அதே பகுதியில் இளைஞர் ஒருவர் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்ததை கண்டனர். எனவே, சந்தேகத்தின் பேரில் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டபோது, அவர்தான், லாட்ஜில் பெண்ணை கொன்றவர் என்பதுதெரியவந்தது. இதையடுத்து அவர் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.
இந்த இளைஞர் சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூரை சேர்ந்தவராம். இவரது பெயர் சரவணன்.. 29 வயதாகிறது.. இறந்து கிடந்த பெண் கோவை எஸ்.எஸ்.குளம் அருகே கள்ளபாளையம் பகுதியை சேர்ந்த கீதா.. 26 வயதாகிறது.. அவினாசி ரோட்டில், ஜிம்மில் டிரெயினராக வேலை பார்த்து வருகிறாராம்.
ரகசிய சந்திப்பு: கீதாவும், சரவணனும் தீவிரமாக காதலித்திருக்கிறார்கள்.. இவர்கள் காதலை குடும்பத்தினர் ஏற்கவில்லை.. இதற்கு காரணம், கீதாவும், சரவணனும் அண்ணன், தங்கை உறவுமுறையாம்.. எனவே, இருவருமே வீட்டிற்குத் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளனர்... ஆனால் முறைப்படி திருமணத்தை பதிவு செய்யவில்லை.. எனினும், லாட்ஜ்களில் ரூம் எடுத்து ரகசியமாக தங்கி உல்லாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
ஆனால், கீதாவின் நடத்தையில் சரவணனுக்கு சந்தேகம் இருந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்குள்ளும் வாக்குவாதம் வெடித்து வந்துள்ளது.. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியபோதும், இது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நடந்த சண்டையில், கீதாவின் முகத்தில் ஓங்கி குத்தியதுடன், தலையை அங்கிருந்த சுவற்றிலேயே மோத செய்துள்ளார் சரவணன்.
விசாரணை: இதில் முகம் படுகாயமடைந்து, முழுமையாக நசுங்கிப்போய் கீதா சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இவ்வளவும் விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து, சரவணனை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். பெண்ணை கொலை செய்த மறுநாளே இளைஞர் கைதாகியிருப்பது, கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications