திடீர் பரபரப்பு! MY V3 Ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்த் கைது! கோவை போலீசார் அதிரடி! என்ன காரணம்
கோவை: கோவையில் MY V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் உள்ளிட்ட 70 பேரை கோவை போலீசார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் கோவையில் இயங்கி வரும் MY V3 Ads ஆன்லைன் நிறுவனம் மீது கோவை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. 360 ரூபாய் முதல் 1.20 லட்சம் ரூபாய் வரை முதலீடுகளைப் பெற்று பொதுமக்களை ஏமாற்றுவதாகப் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த மாதம் இறுதியில் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த்தை விசாரணைக்கு அழைத்தனர். அப்போது திடீரென அவருக்கும் அந்த நிறுவனத்திற்கும் ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் கோவை நீலாம்பூர் L&T பைபாஸ் சாலையில் திரண்டனர்.
திரண்ட மக்கள்: மோசடி புகாருக்கு உள்ளான நிறுவனத்திற்கு ஆதரவாகவே திடீரென இப்படி பொதுமக்கள் திரண்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விசாரணை முடித்து அவரை போலீசார் அனுப்பி வைத்தனர். தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் தங்களுக்கு முதலீடுகள் வந்துள்ளதாகத் தெரிவித்த சக்தி ஆனந்த், நிறுவனத்தின் மீது சிலர் வீண் பழி போட முயல்வதாகவும் சாடியிருந்தார்.
அதேபோல அங்குத் திரண்ட பொதுமக்கள் அனைவருமே அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் தான். பலரும் தங்களுக்கு வர வேண்டிய தொகை ஒரு நாள் கூட தள்ளிப் போனதே இல்லை என்றும்.. ரூ. 6, ரூ. 15 எனத் தொகை எவ்வளவு என்றாலும் சரியான நேரத்தில் பணம் வந்துவிடும் என்றனர். இன்னும் சிலர் பல லட்சம் வரை இதில் முதலீடு செய்துள்ளதாகவும் தங்கள் குடும்பே இதை நம்பி தான் இருப்பதாகக் கூடச் சொன்னார்கள். இது பிரச்சினையின் தீவிர தன்மையை உணர்த்துவதாக இருந்தது.
என்ன காரணம்: அதேபோல திடீரென அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் எப்படித் திரண்டார்கள் என்பதும் முதலில் மர்மமாக இருந்தது. அதன் பின்னரே நிறுவனத்தின் மீது புகார் வந்துள்ள நிலையில், ஆதரவாகப் போராட வரவில்லை என்றால் வருமானம் நின்று விடும் என்று சிலர் மிரட்டல் விடுக்கும் வகையிலான மெசேஜ்களை அனுப்பிய தகவல்கள் வெளியானது. அனைவரும் ஒன்று சேர்ந்து வந்தால் மட்டுமே முடிவு கிடைக்கும் என்று கூறி எந்த இடத்திற்கு வர வேண்டும் என்பதையும் சொல்லி இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அனுமதி இல்லாமல் கூட்டம் கூடியது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இணையத்தில் பலரும் மை வி3 நிறுவனம் குறித்துப் பேசவும் எழுதவும் தொடங்கினர். பலரும் இதில் மோசடி இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பது போலவே கூறியிருந்தனர். இந்தச் சூழலில் தான் இப்போது கோவையில் மை வி 3 நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது: தன் மீதும் தனது நிறுவனம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட முயன்றார். இதையடுத்து சக்தி ஆனந்த்தை போலீசார் கைது செய்தனர். அவருடன் தர்ணாவில் ஈடுபட முயன்ற 70 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications