கோவை தலைமை காவலருக்கு அரிவாள் வெட்டு.. சுற்றி வளைத்து நகையை பறித்த மர்ம நபர்கள்
கோவை: காவல்துறையினருக்கு இது மோசமான காலம். சிவகங்கை திருப்புவனம் இளைஞர் கஸ்டடி மரணத்தையடுத்து, காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் மனைவியுடன் பயணித்த தலைமை காவலர் மீது அரிவாள் வெட்டு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அஜித் குமார் என்ற இளைஞரை, காவல்துறையினர் கடந்த வாரம் கஸ்டடியில் விசாரித்து வந்தனர். திருட்டு வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் அஜித் குமாரை, காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய காவலர்கள் கைது செய்யப்பட்டவிட்டனர்.

காவல்துறையின் இதுபோன்ற சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள், பொது மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. மாநிலம் முழுவதும் காவல்துறையினர் ஈடுபடும் மனித உரிமை மீறல் செயல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. மறுபக்கம், ஒருசிலர் செய்யும் தவறுகளால் மொத்த காவல்துறையையும் குற்றம் சொல்லக் கூடாது என்றும் சில காவலர்கள் கூறி வருகின்றன.
இந்நிலையில் கோவை க்யூ பிரான்ச் (Q Branch) காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் தலைமை காவலர் பார்த்திபன். இவர் தன் மனைவி, குழந்தைகளுடன் சின்னியம்பாளையம், ஆர்ஜி புதூர் பகுதியில் வசித்து வருகிறார். பார்த்திபன் மனைவி ரேவதி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே பார்த்திபன் நேற்று தன் மனைவியுடன் இரவு கொச்சின் புறவழிச் சாலையில் உணவருந்த சென்றிருந்தார். இரவு 12 மணியளவில் அவர் மனைவியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அவர்களை சுற்றி வளைந்து தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர்கள் பார்த்திதொடர்ந்து கண் இமைக்கும் நொடியில் அந்த மர்ம நபர்கள், தலைமை காவலர் பார்த்திபனை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கி வெட்டியுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து தாலி செயின் மோதிரம் மற்றும் பிரேஸ்லெட் உள்ளிட்ட 5 சவரன் தங்க நகைகளை பறித்து சென்று விட்டனர். ஆள் நடமாட்டல் இல்லாத பகுதி என்பதால் பார்த்திபன் - ரேவதிக்கு உதவ யாரும் இல்லை.
சிறிது நேரத்தில் பார்த்திபன், காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் சொல்லியுள்ளார். அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வரை அவரே சென்று, பிறகு அங்கிருந்து மற்ற வாகனங்களிடம் உதவி கேட்டு கோவைஅரசு மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுள்ளார். மேல் சிகிச்சைக்காக பார்த்திபன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்த சூலூர் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக சீர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வரும் நிலையில், காவல்துறையை சேர்ந்தவரையே வெட்டி, நகை பறித்து சென்ற சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
பொள்ளாச்சியில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.. கனிம வளத்துறை அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications