போலீஸ் அக்கா திட்டம்.. சபாஷ் போட வைத்த கோவை போலீஸ் கமிஷ்னர்.. இதுதான் சூப்பர் சம்பவம்
கோவை: யாராவது பெண்களை புகைப்படம் எடுத்து வைத்து கொண்டு மிரட்டினால், தனக்கு போலீஸ் அக்காவை தெரியும் என்று மாணவிகள் தைரியமாக கூறுங்கள் என கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகரில் 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்படுகின்றன. சென்னையைவிட கோவையில் போய் படிப்பதை தான் பலரும் விரும்புகிறார்கள். உயர்கல்வியின் நகரம் என்று சொல்லும் அளவுக்கு கோவை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் 'போலீஸ் அக்கா' என்ற திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

போலீஸ் அக்கா திட்டத்தின் படி, கோவை மாநகரில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும், ஒரு மகளிர் காவலர் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
குறிப்பிட்ட பெண் காவலர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளை தொடர்பு கொண்டு அவர்களுடன் கலந்துரையாடுவது, அவர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியிலான, பாலியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது போன்ற பணிகளை செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு இடைநின்ற 150 மாணவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க போலீஸ் அக்கா திட்டம் முக்கிய காரணமாக இருந்துள்ளது.
இந்நிலையில் போலீஸ் அக்கா திட்டம் பற்றி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பல்வேறு விஷயங்களை புதன்கிழமை அன்று தனியார் கல்லூரியில் நடந்த விழாவில் பேசினார். தேசிய பெண்கள் தினத்தையொட்டி கோவை தனியார் கல்லூரியில் தேசிய பெண்கள் தின விழா நடந்தது.
அந்த விழாவில் கமிஷ்னர் பாலகிருஷ்ணனன் பேசும் போது, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு, ஏதாவது பிரச்சினைந நடந்தால் வெளியில் சொல்ல முடியாத சூழலில் மனஅழுத்தம் உருவாகிறது, அப்படியான நேரங்களில் காவல் நிலையம் செல்ல அவர்களுக்கு தயக்கமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தான் மாணவிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு உதவும் வகையில் போலீஸ் அக்கா திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மாணவிகளே.. யாராவது பெண்களை புகைப்படம் எடுத்து வைத்து கொண்டு மிரட்டினால், தனக்கு போலீஸ் அக்காவை தெரியும் என்று தைரியமாக கூறுகங்கள். உங்களின் பிரச்சினைகளை போலீஸ் அக்கா கண்டிப்பாக தீர்ப்பார்.
காவல்துறையில் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் அதிவிரைவுப்படை, மோப்பநாய், கனரக வாகன டிரைவர்கள் என அனைத்து பிரிவுகளிலும் பெண்கள் பணியாற்றுகிறார்கள். நிச்சயமாக பெண்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இந்த விழாவிற்கு பின்னர் கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், :" நாங்கள் போலீஸ் அக்கா திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்துகிறோம்.
மாணவ-மாணவிகளின் இடைநிற்றலை தடுக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த ஆண்டு இடைநின்ற 150 மாணவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்த்திருக்கிறோம். இந்த ஆண்டு 62 மாணவ-மாணவிகளை பள்ளிகளில் சேர்த்திருக்கிறோம். அவர்கள் பள்ளிகளில் படிக்க தேவையான உதவிகளை போலீஸ் அக்கா மூலம் செய்தும் வருகிறோம். ஒவ்வொரு பள்ளிக்கும் போலீசார் சென்று போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்கள்" என அவர் கூறினார்.
-
பொள்ளாச்சியில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.. கனிம வளத்துறை அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications