தாய்லாந்தில் அதிக சம்பளத்தில் ஐடி வேலை.. அப்படி அழைத்தால் ஆர்வத்தில் போயிடாதீங்க.. போலீஸ் வார்னிங்
கோவை : கோவை உள்பட தமிழ்நாட்டை சேர்ந்த தகவல் தொழில்நுட்பம் படித்த பட்டதாரி வாலிபர்களை, சமூகவலைத்தளம் மூலமாக மூளைச்சலவை செய்து, கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அழைத்துச்சென்று மோசடிக்கு பயன்படுத்துவதால் உஷாராக இருக்குமாறு கோவை போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
கோவை மாநகர போலீசார் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது: "-கோவை உள்பட தமிழ்நாட்டை சேர்ந்த தகவல்தொழில்நுட்பம் படித்த பட்டதாரி வாலிபர்களை, சமூகவலைத்தளம் மூலமாக மூளைச்சலவை செய்து கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் வேலைக்கு ஏற்பாடு செய்வதாக கூறி சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்கிறார்கள்.

பின்னர் அந்த வாலிபர்களை ஏமாற்றி கால்சென்டர் மோசடி, கிரிப்டோ கரன்சி மோசடி உள்ளிட்ட ஆன்லைன் மோசடிகளில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும், அதுபோன்ற மோசடியில் ஈடுபட மறுப்பவர்களை துன்புறுத்தப்படுவதாகவும் புகார்கள் வருகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க அயலக தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்ட விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும். மத்திய அரசால் பதிவு செய்யப் பட்ட முகவர்கள் மூலம் வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம் என்ன பணி போன்ற விவரங்களை சரியாகவும், முழுமையாகவும் தெரிந்துகொள்ள வேண்டும்.
உரிய விவரங்கள் தெரியாவிட்டால் தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலத்துறை, அல்லது குடிபெயர்வோர் பாதுகாப்பு அதிகாரி அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு தாங்கள் பணி செய்யும் நிறுவனங்களின் உண்மை தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வெளிநாட்டு பணி குறித்து இந்திய வெளியுறவுத்துறை மற்றும் வேலைக்கு செல்லும் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் இணைய தளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளை வெளி நாட்டு வேலைக்கு செல்ல விரும்புவோர்கள் முழுமையாக படித்து தெரிந்துகொள்ள வேண்டும். பாதுகாப்பான முறையில் வெளிநாடு செல்வது குறித்து அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் பட்டியல் www.emigrategov.in என்ற இணையதளத்தில் உள்ளதை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். அல்லது [email protected] என்ற இணையதளத்திலும் பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கங்களை பெறலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications