மாதவிடாயால் ஒதுக்கப்பட்ட மாணவி.. படியில் உட்கார்ந்து.. கோவை அசிங்கம்! விழிப்புணர்வு பள்ளிக்கு தேவை
கோவை: கோவை மாவட்டம் தனியார் பள்ளியில், 8ம் வகுப்பு மாணவிக்கு நடந்த சம்பவம் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி இணையவாசிகளுக்கு அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது. அந்த தனியார் பள்ளியின் பெயர் தெரியவில்லை.. ஆனால், மாணவியின தாய் தனது செல்போனில் பதிவு செய்த இந்த வீடியோ காட்சிகள் வைரலாகியதால், அதுகுறித்த நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
சமீபகாலமாகவே, மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம், மன அழுத்தம், டென்ஷன், மன உளைச்சல் போன்ற காரணங்களால் பருவமடைதலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன்காரணமாக சீரற்ற மாதவிடாய், அதிக உதிரப்போக்கு, பிசிஓடி என்று சொல்லப்படும் கருப்பை நீர்க்கட்டிகள் என்று இளம்பெண்கள் அளவுக்கு அதிகமான இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

மாதவிடாய் என்பது இயல்பான விஷயம் என்றாலும், அதுதொடர்பான மூடநம்பிக்கைகள் இன்னும் ஓயவில்லை... இன்றும்கூட எத்தனையோ கிராமங்களில், மாதவிடாய் நேரத்தில் பெண் குழந்தைகளை வீட்டிலிருந்து விலக்கி வைப்பது, தனி தட்டு, தனி பாய், தலையணை தந்து, ஒதுக்கி வைக்கும் போக்கு தொடர்ந்து நடக்கிறது.
குழந்தைகள் மனநிலைமை
படித்தவர்களும் இதுபோன்று செய்வது வேதனையையும், அதிர்ச்சியையும் உண்டுபண்ணி வருகிறது.. இப்படி ஒதுக்கி வைக்கப்படும்போது, குழந்தைகளின் மனநிலைமையும் இனம்புரியாத வேதனைக்குள் செல்ல நேரிடுகிறது, அவசியமேயில்லாமல் தீண்டத்தகாதவர்கள் போல நடத்தப்படுகிறோமே என்ற எண்ணமும் உருவாகி விடுகிறது.
வீடுகளில்தான் இப்படியான கொடுமை என்றால், பள்ளிகளிலும் அதற்கு மேல் கொடுமைகள் நடக்கின்றன.. தற்போது 6ம் வகுப்பு, 7ம் வகுப்பு மாணவிகள் பூப்படைவதால், அந்த பிஞ்சு வயதில் இதற்கான புரிதல்களும் சரியாக இருப்பதில்லை.
நெல்லையை அதிர வைத்த சம்பவம்
2 வருடங்களுக்கு முன்பு நெல்லையை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி ஒருவருக்கு வகுப்பறையில் மாதவிடாய் ஏற்பட்டு, யூனிபார்மிலும், அவர் உட்கார்ந்திருந்த பெஞ்சிலும் ரத்தக்கறை படிந்துள்ளது.
இதனை பிற மாணவிகள் சுட்டிக்காட்டவும், உடனே அந்த மாணவி பதறிப்போய்விட்டார்.. அதனால் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கிளாஸ் டீச்சரிடம் அனுமதி கேட்டிருக்கிறார்.. ஆனால், அந்த டீச்சரோ, வகுப்பறையில் ரத்தக்கறை படிந்ததை பார்த்ததுமே, மாணவியை அசிங்கமாக திட்டியிருக்கிறார்.. மற்ற மாணவர்களின் முன்பு இப்படி திட்டியதுடன், தலைமை ஆசிரியரை சென்று சந்தித்து விட்டுவரும்படி கிளாஸ் ரூமை விட்டு வெளியேற்றினார். இதனால் அவமானமும், வேதனையும் அடைந்த அந்த 7ம் வகுப்பு பெண் குழந்தை, தற்கொலையே செய்து கொண்டது.
மாதவிடாய் சிக்கல்கள்
பள்ளிகளிலேயே மாதவிடாய் குறித்த புரிதல்கள் இருப்பதில்லை.. அதிலும், பள்ளி ஆசிரியர்களும் இது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதும் கிடையாது. இதோ இன்னொரு கொடுமை கோவையில் இன்று நடந்துள்ளது..
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு செங்குட்டைபாளையம் கிராமத்தை சேர்ந்த மாணவி, தனியார் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்... பள்ளியில் இப்போது முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த மாணவி, கடந்த 5ம் தேதி பூப்பெய்தி இருக்கிறார்.. பிறகு கடந்த 7ம் தேதியும், 9ம் தேதியும் தேர்வு நடந்துள்ளது..
பள்ளி நிர்வாகம்
ஆனால், இந்த 2 தேர்வுகளுக்குமே மாணவியை பள்ளி நிர்வாகம் தேர்வு எழுத வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை.. மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், பள்ளி வாசலிலேயே படிக்கட்டில் உட்கார்ந்து தேர்வு எழுத வைத்துள்ளனர்... இந்த விஷயம் சம்பந்தப்பட்ட மாணவியின் அம்மாவுக்கு தெரியவந்துள்ளது..
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய், பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆனால், பள்ளி நிர்வாகம் அதற்கு சரியாக பதிலை சொல்லாமல், அலட்சியப்படுத்தினார்களாம்.
கொந்தளித்த தாய் - வீடியோ
இதனால் கொந்தளித்து போன அந்த தாய், தன்னுடைய மகளை படியில் உட்கார வைத்து தேர்வு எழுத வைத்ததை, செல்போனில் வீடியோவாக எடுத்துவிட்டார். இந்த வீடியோவை பார்த்த பலரும் கொந்தளித்து விட்டார்கள்.. இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் இணையத்தில் வலுவாகி வருகிறது.
ஆகமொத்தத்தில், மாதவிடாய் பற்றின புரிதலையும் விழிப்புணர்வையும், குழந்தைகளைவிட, அவர்களின் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும்தான் இங்கு முதலில் தரவேண்டியிருக்கிறது. விரிவாக விவாதிக்க வேண்டியுமிருக்கிறது..!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications