மதுக்கரையில் மதுபோதையில் வந்த மருமகன்.. வீட்டுக்குள் நுழைந்து.. அடுத்து நடந்த பயங்கரம்
கோவை: கோவை மதுக்கரையில் மாமனாரை கட்டையால் அடித்து மருமகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மதுக்கரை மார்க்கெட் வி.ஓ.சி வீதியை சேர்ந்தவர் கனேசன் (50). கார்பண்டராக வேலை செய்து வந்தார். இவரது மருமகன் அரிசிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த விக்னேஷ்வரன் (21). இவரும் கனேசனுடன் கார்பண்டர் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கனேசன், விக்னேஷ்வரனுக்கு சம்பள பாக்கி வைத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக விக்னேஷ்வரன் அடிக்கடி கனேசனிடம் கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி மது போதையில் கனேசனின் வீட்டிற்கு வந்த விக்னேஷ்வரன், சம்பள பாக்கியை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து கனேசனை சரமாரியாக தாக்கி உள்ளார். இதையடுத்து படுகாயமடைந்த கனேசனை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக கனேசனின் மனைவி குமாரி மதுக்கரை போலீஸில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் மருமகன் விக்னேஷ்வரன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து விக்னேஷ்வரனை கைது செய்து, அவினாசி சப் ஜெயிலில் அடைத்தனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த கனேசன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications