கோவை தெற்கில் தேர்தலை ரத்து செய்ய அதிமுக புதிய வியூகம்.. ஆடிப்போன தேர்தல் ஆணையம்
கோவை: கோவை தேர்தல் களம் கொதிகொதித்து கொண்டிருக்கிறது. செந்தில் பாலாஜி, வேலுமணி இடையே அதிகார போட்டி உச்சத்தில் உள்ளது. கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக அதிமுக புகார் எழுப்பியது. ஆனால் ஆதாரபூர்வமாக எதுவும் சிக்கவில்லை. இதனால் கோவை தெற்கில் தேர்தலை ரத்து செய்ய கோரி, அதிமுக புதிய வியூத்துடன் களமிறங்கியிருப்பது திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த சில தேர்தல்களாகவே கோவை அரசியல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலிலும் கோவை அரசியல் களம் மிகவும் பரபரப்புடன் காணப்படுகிறது. வேட்பாளர்கள், பிரச்சாரம், பணப்பட்டுவாடா எல்லாவற்றிலும் தனி கவனம் பெறுகிறது.

திமுகவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா (Coimbatore South)
கோவையில் திமுக வெற்றி பெற வைக்க வேண்டும் என்கிற ஸ்பெஷல் அஸைன்மென்டுடன் செந்தில் பாலாஜியை களமிறக்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். செந்தில் பாலாஜியின் வருகை கோவை திமுகவுக்கு திருப்புமுனையாக இருந்துள்ளது. 2022 உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து 2026 தேர்தலில் கோவையில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய காய் நகர்த்தி வருகிறார்.
கோவை மாவட்டத்தில் திமுக, அதிகளவு பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுக மற்றும் சுயேட்சைகள் புகார் எழுப்பி வருகிறார்கள். முக்கியமாக கோவை தெற்கில் திமுக ஒரு வாக்குக்கு ரூ.5,000 பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்துள்ளது. கரூரில் இருந்து வந்துள்ள செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் மூலம் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக அதிமுக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்தனர்.
அதிமுக புதிய வியூகம்
கோவை தெற்கில் இரவோடு இரவாக பணப்பட்டுவாடா செய்ததாக கூறி அதிமுகவினர் சிலரை பிடித்து பிரச்சனை செய்தனர். அதிகளவு புகார்கள் எழுவதால் கோவை தெற்கில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை அதிமுக எழுப்பி வருகிறது. அந்த வகையில் கோவை தெற்கில் திமுகவுக்கு குடைச்சல் கொடுக்க அதிமுக புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ளது.
பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி, கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க கோரி, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நூற்றுக்கணக்கான புகார்கள் மின்னஞ்சல் மூலமாக அதிமுகவினர் அனுப்பி வருகிறார்கள். கோவை தெற்கு தொகுதியில் 11 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிலும் அங்குள்ள அதிமுக வார்டு செயலாளர் மூலமாக புகார் அனுப்ப கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ரத்து புகார்
ஒவ்வொரு வார்டு செயலாளரும் குறைந்தது 10 புகார்களை அனுப்ப வேண்டும் என்று டார்கெட் கொடுத்துள்ளனர். எந்த இடத்திலும் அதிமுக கட்சி பெயரை குறிப்பிடாமல், கோவை தெற்கு தொகுதி வாக்காளர் என்ற அடிப்படையில், தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் இந்த புகார்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications