ஏன் இன்னும் கோவை மாணவி வழக்கில் 3 குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியே வரவில்லை? சட்டப்பின்னணி
கோவை: ஏன் இன்னும் கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட 3 குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியிடப்படவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதற்கு சட்ட ரீதியாக காரணங்கள் உள்ளது.. அதாவது குற்றவாளி அணிவகுப்பு நடத்தி, அந்த குற்றவாளிகளை பாதிக்கப்பட்ட அந்த பெண் உறுதிப்படுத்த வேண்டும். ஒருவேளை அதற்கு முன்பே குற்றவாளிகளின் புகைப்படங்களை ஊடகத்தில் வெளியிட்டால், அது குற்றவாளிகளுக்கு சாதகமாகும் வாய்ப்பு உள்ளது. எப்படி என்று பார்ப்போம்.
பொதுவாக பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் புகைப்படங்கள் உடனடினயாக வெளியிடப்படுவது இல்லை.. இதற்கு மிகவும் சட்டரீதியான, முக்கியமான காரணம் பின்னணியில் உள்ளது. குற்றவாளிகளின் புகைப்படங்கள் உடனடியாக வெளியிடப்படாததற்குப் பின்னால் உள்ள முக்கிய சட்ட காரணங்களை பார்ப்போம்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டவுடன், அவர்களின் அடையாளத்தை பாதிக்கப்பட்டவரோ அல்லது சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியோ (Witness) நீதிபதி முன்னிலையில் அடையாளம் காட்ட வேண்டும். இதற்குப் பெயர்தான் அடையாள அணிவகுப்பு. அடையாள அணிவகுப்புக்குச் செல்வதற்கு முன்னர், சாட்சிகள் குற்றவாளியை வேறு எந்த வகையிலும் பார்த்திருக்கக் கூடாது.
போலியான அடையாளம்
காவல் துறை கைது செய்த குற்றவாளியின் புகைப்படத்தை ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்களில் வெளியிட்டால், சாட்சி அந்தப் புகைப்படத்தை முன்னரே பார்த்துவிட நேரிடும். அவ்வாறு நடந்தால், நீதிமன்றத்தில் சாட்சி அடையாளம் காட்டுவது "போலியான அடையாளம்" என்று கருதப்பட்டு, அந்த சாட்சியத்தின் மதிப்பு குறைந்துவிடும். இது இறுதியில் குற்றவாளிகள் சட்டப் பிடியிலிருந்து தப்பிக்க வழிவகுக்கும் என்று சட்ட ரீதியான அச்சம் உள்ளது.
காவல்துறை சுற்றறிக்கை
இந்த பிரச்சனை காரணமாகவே காவல்துறை இயக்குநர் முக்கியமான சுற்றறிக்கை கடந்த காலங்களில் வெளியிட்டிருக்கிறார். நீதிமன்றங்கள் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள், விசாரணைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் புகைப்படங்கள் அல்லது தனிப்பட்ட விவரங்களை ஊடகங்களுக்கு வெளியிடக் கூடாது என அறிவுறுத்தி உள்ளார். இந்த வழிகாட்டுதல்களின்படியே காவல்துறை செயல்பட்டு வருகிறது.
தனியுரிமையை மீறும் செயல்
அதேபோல், ஒரு நபர் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படும் வரை, அவர் குற்றஞ்சாட்டப்பட்டவர் மட்டுமே. இந்திய அரசியலமைப்பின் கீழ் அவருக்குரிய தனியுரிமை உரிமையும் (Article 21) அவருக்கு உண்டு. எனவே, காவல்துறையால் கைது செய்யப்பட்டவுடன், குற்றத்தை நிரூபிக்கும் முன்னர், அவர்களின் புகைப்படங்களை பொதுவெளியில் வெளியிடுவது அவர்களின் தனியுரிமையை மீறுவதாக பார்க்கப்படும்.
தண்டனை வேண்டும்
ஆகவே, கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்படாததற்குப் பிரதான காரணம், சட்டத்தின்படி நடைபெற வேண்டிய அடையாள அணிவகுப்பு பாதிக்கப்பட்டு, அதன் மூலம் குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது என்பது தான். காவல்துறையின் நோக்கம், சட்டத்தின் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி குற்றவாளிகளுக்கு உறுதியான தண்டனையைப் பெற்றுக் கொடுப்பது தான்..
அடையாள அணிவகுப்பு
ஒருவேளை அடையாள அணிவகுப்பு (Test Identification Parade என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள் ) நடத்தப்படுவதற்கு முன்னர், கோவை சம்பவத்தில் காவல் துறை அல்லது ஊடகங்கள் குற்றஞ்சாட்டப்பட்டவரின் புகைப்படத்தை வெளிப்படையாக வெளியிட்டால், அது குற்றவாளிகள் தப்பிப்பதற்குப் பெரிய அளவில் வழிவகுக்க வாய்ப்பு உள்ளது.
எப்படி தப்பிப்பார்கள்
அடையாள அணிவகுப்பின் முக்கிய நோக்கம், பாதிக்கப்பட்டவர் அல்லது நேரில் பார்த்த சாட்சி, காவல்துறையின் எந்தவிதமான தூண்டுதலும் இன்றி குற்றவாளியை அடையாளம் காட்ட வேண்டும் என்பது தான். ஒரு வேளை புகைப்படம் வெளியானால், சாட்சி அடையாள அணிவகுப்பின் போது, "நான் இவரைத்தான் டி.வி./நாளிதழில் பார்த்தேன்" என்று கூற வாய்ப்பு உள்ளது. இது உண்மையான அடையாளம் அல்ல, மாறாக ஏற்கனவே பொதுவெளியில் பார்த்த புகைப்படத்தின் அடிப்படையில் ஏற்பட்ட அடையாளம் என்று நீதிமன்றம் கருதும் வாய்ப்பு உள்ளது.
இதனால், நீதிமன்றத்தில் அந்த அடையாளச் சாட்சியத்தின் நம்பகத்தன்மை மற்றும் சட்டரீதியான மதிப்பு பெரிதும் குறைந்துவிடும். சட்டப்படி, ஒவ்வொரு குற்றவாளிக்கும் "சந்தேகத்தின் பலன்" அளிக்கும் உரிமை உண்டு.
குற்றவாளிக்கு சாதகம்
புகைப்படம் வெளியானதால், அடையாள அணிவகுப்பு செயல்முறை பிழைபட்டது என்று குற்றவாளியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எளிதாக வாதிடுவார். சாட்சியத்தின் நம்பகத்தன்மை குறைந்தால், நீதிமன்றம் குற்றத்தை நிரூபிக்க போதுமான உறுதியான ஆதாரம் இல்லை எனக் கருதி, குற்றவாளிகளை விடுதலை செய்ய நேரிடலாம்.
ஊடகங்கள் அவசரம்
எனவே தான் பாலியல் வன்கொடுமை போன்ற முக்கிய வழக்குகளில், பாதிக்கப்பட்டவர் மற்றும் சாட்சிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், விசாரணை நேர்மையாக நடக்கவும், குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளியிடாமல் இருப்பது விசாரணையின் பாதுகாப்பிற்கும், நீதியைப் நிலைநாட்டுவதற்கும் முக்கியமான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. அதேநேரம் சில ஊடகங்கள் செய்திகளை முதலில் தர வேண்டும் என்று நினைத்து பாதிக்கப்பட்ட பெண்படிக்கும் கல்லூரி அல்லது படிக்கும் வகுப்பு, உள்பட சில விஷயங்களை வெளியிடுகின்றன. சில நேரங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை கூட வெளியிட்டு விடுகின்றன. இது இன்று வரை நடந்து வருகிறது.
-
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications