ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த கோவை சுவாதி ஸ்ரீ! 3வது முயற்சியில் அசத்தல்
கோவை: ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த கோவை மாணவி சுவாதி ஸ்ரீக்கு பாராட்டுகள் குவிகின்றன.
நாடு முழுவதும் 712 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் அகில இந்திய அளவில் குடிமையியல் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு கடந்த அக்டோபர் 10ஆம் தேதி நடந்தது.
இந்த தேர்வு முடிவுகள் அக்டோபர் 30ஆம் தேதி வெளியாகின. இதில் தேர்ச்சி பெற்றவர்கள பிரதான தேர்வை எழுதினர். இந்த தேர்வு ஜனவரி 7 முதல் 16 ஆம் தேதி வரை நடந்தது. இதன் முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்பட்டன.

தேர்வு
பிரதான் தேர்வில் வென்றவர்களுக்கு கடந்த ஏப்ரல் 14 முதல் மே 24 வரை நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதன் முடிவு நேற்றைய தினம் (மே 30) அறிவிக்கப்பட்டன. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஸ்ருதி சர்மா தேசிய அளவில் முதலிடம் பிடித்தார்.

கோவை மாணவி
அது போல் கோவையை சேர்ந்த ஸ்வாதி ஸ்ரீ தேசிய அளவில் 42 ஆவது இடத்தையும் தமிழகத்தில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் கோவை குருடம்பாளையம் ஊராட்சியை சேர்ந்தவர். இவரது தந்தை இன்சூரன்ஸ் மற்றும் ஷேர் மார்க்கெட்டிங் துறையில் பணியற்றி வருகிறார்.

ஊட்டி
தாய் தபால் துறையில் பணியாற்றி விஆர்எஸ் வாங்கிவிட்டார். ஸ்வாதி ஸ்ரீ தனது தொடக்கக் கல்வியை ஊட்டியிலும் உயர் நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியை குன்னூரிலும் படித்தார். இவர் தஞ்சையில் உள்ள கல்லூரியில் வேளாண்மை படித்துள்ளார்.

விவசாயம்
இவர் கிராமங்களில் விவசாயத்தை பற்றிய தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள செல்லும் போது விவசாயிகளுடன் தங்கி அவர்களின் பிரச்சினைகளை அறிந்து அதற்கு எப்படி தீர்வு காணலாம் என யோசனை செய்துள்ளார். இதற்கு உயர் பதவியை பெற்றால்தான் முடியும் என அவர் நினைத்ததால் சிவில் சர்வீஸ் மூலம் ஐஏஎஸ் ஆவது என எண்ணி அதற்காக முழு வீச்சில் இறங்கினார்.

மூன்றாவது முயற்சியில் ஐஏஎஸ் வெற்றி
சென்னையில் உள்ள மனிதநேயம் மற்றும் அறம் ஐஏஎஸ் அகாதெமியில் தங்கியிருந்து பயிற்சி பெற்றார். இரண்டாவது முறை தேர்வு எழுதிய அவருக்கு ஐஆர்எஸ் பதவி கிடைத்தது. இருந்தும் ஐஏஎஸ் தேர்ச்சி பெற கடுமையாக உழைத்து 3ஆவது முறை ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார்.
-
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications