கோவை ஆணவக் கொலை விவகாரம்.. தம்பியை தொடர்ந்து தம்பியின் காதலியும் பலி!
Recommended Video
கோவை: மேட்டுப்பாளையம் ஆணவக்கொலை விவகாரத்தில் காதலனை தொடர்ந்து காதலியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் வினோத். இவரது தம்பி கனகராஜ் வேறு சாதியை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

இதனை விரும்பாத அண்ணன் வினோத் தனது தம்பியிடம் காதலை கைவிடுமாறு பல முறை எச்சரித்துள்ளார். ஆனால் தம்பி அதனை காதில் போட்டுக்கொள்ளாமல் தொடர்ந்து காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி, இருவரும் சந்திப்பதை அறிந்த அண்ணன் வினோத், தம்பியையும் அவரது காதலியையும் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதைத்தொடர்ந்து கனகராஜின் காதலியான வர்ஷினி பிரியா, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி வர்ஷினி பிரியா உயிரிழந்தார்.
தம்பி கனகராஜை வெட்டிக்கொன்ற கையோடு வினோத் காவல்நிலையத்தில் சரணடைந்தார். ஆணவக்கொலையில் காதலன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் காதலியும் தற்போது உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications