கோவை மக்களே.. ஈஸியாக திருப்பதி பெருமாளை தரிசிக்கலாம்.. ஐஆர்சிடிசி வெளியிட்ட ஸ்பெஷல் அறிவிப்பு
கோவை: ஒவ்வொரு செவ்வாய் தோறும் திருப்பதிக்கு ரயிலில் சுற்றுலா செல்லும் திட்டம் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து ரயிலில் திருப்பதிக்கு சுற்றுலா செல்ல விரும்பும் பயணிகள் ஐஆர்சிடிசி தளத்தில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பதி பாலாஜி சுவாமி தரிசன சுற்றுலா திட்டத்தின் கீழ், ஓர் இரவு, 2 நாட்கள் கொண்ட சுற்றுலாவில் திருமலை,காளஹஸ்தி கோயில், பத்மாவதி கோயில் ஆகிய இடங்களை பொதுமக்கள் சுற்றிப் பார்க்கலாம்.

பயண திட்டம் எப்படி இருக்கும்? பயணத்தின் முதல் நாளில் கோவை - திருப்பதி இடையிலான ரயில் (எண்:22616) செவ்வாய்க் கிழமைகளில் காலை 6 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, மதியம் 1.20 மணிக்கு திருப்பதி சென்றடையும். வழியில், திருப்பூர், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

கோவில் சுற்றுலாவிற்கு புக்கிங் செய்யும் பக்தர்கள் திருப்பதி, காளஹஸ்தி, பத்மாவதி கோயில் தரிசனத்தை நிறைவு செய்துவிடுவார்கள். பின்னர் இரண்டாம் நாள் (புதன்கிழமை) மதியம் 2 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்படும் ரயில் (எண்:22615), இரவு 10.45 மணிக்கு கோவை வந்தடையும். இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு இருக்கை, சேர் கார் என தங்களுக்கு எது விருப்பமோ அதில் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
மொத்த கட்டணத்தில் பயண காப்பீடு, சுற்றுலா வழிகாட்டி, தரிசன டிக்கெட் கட்டணம், ஹோட்டலில் ஏசி அறையில் தங்கும் வசதி, முதல்நாள் இரவு உணவு, மறுநாள் காலை சிற்றுண்டி, வாகன வசதி உள்ளிட்டவையும் அடக்கமாகும்.
வரும் ஏப்ரல் 18, 25, மே 2, 9, 16, 23, 30, ஜூன் 6, 13, 20, 27, ஜூலை 4, 18, 25 ஆகிய தேதிகளில் முன்பதிவு செய்யவும், கட்டண விவரங்களை தெரிந்துகொள்ளவும் 9003140655 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது www.irctctourism.com என்ற இணையதளத்தில் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்" இவ்வாறு ஐஆர்டிசி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications