கோவை உக்கடத்தில் அடுத்த பிரம்மாண்டம்.. சுரங்கப்பாதையுடன்.. ஒன்றல்ல.. இரண்டு.. சூப்பர் முடிவு
கோவை: கோவை உக்கடம் ஆத்துபாலம் மேம்பாலப்பணிக்காக இடிக்கப்பட்ட உக்கடம் பஸ் நிலையம் ரூ.20 கோடியில் சுரங்கப்பாதையுடன் இரண்டு நிலையங்களாக அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
சென்னையைப் போல் கோவையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்று ஒன்று இல்லை. திருச்சியைச் சுற்றி உள்ள திருச்சி, கரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்பட டெல்டா பகுதிகள் மற்றும் மதுரை, தேனி, திண்டுக்கல்,திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்பட தென்மாவட்ட பேருந்துகள் சிங்காநல்லூரில் நிறுத்தப்படுகின்றன.

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகள், சென்னை, ஈரோடு, சென்னை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட வட மாவட்ட பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. இதேபோல் உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பழனி, உடுமலை, பொள்ளாச்சி, பாலக்காடு, திருச்சூர் மற்றும் கேரள மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் மற்றும் நகர பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த உக்கடம் பேருந்து நிலையம், மேம்பால பணிகளுக்காக ஏற்கனவே இடிக்கப்பட்டது. அதனை தொடர்ந் உக்கடம்- ஆத்துப்பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கியது. தற்போது உக்கடம் மேம்பால பணிகள் முடிவடைந்து விட்டதால் உக்கடத்தில் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
மேம்பால பணிகளுக்காக உக்கடத்தில் ஏற்கனவே உள்ள பஸ் நிலையத்தில் வளாகச் சுவர் மற்றும் கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில், பஸ் நிலையத்தை சீரமைத்து நவீனப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதேபோல் உக்கடம் காவல் நிலையத்திற்கு எதிரே காலியாக உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில் புதிய பஸ்நிலையம் அமைக்கவும் முடிவு செய்துள்ளார்கள் அதிகாரிகள். இந்த பஸ் நிலையங்கள் கட்ட ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.. நெடுஞ்சாலை பகுதியில் 2 பஸ் நிலையமும் அமைவதால் பொதுமக்கள் கடந்து செல்ல வசதியாக 100 மீட்டர் நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கவும் முடிவு செய்துள்ளார்கள். அதற்கு சுமார் ரூ.8 கோடி செலவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளியூர் செல்ல ஒரு பஸ்நிலையம், நகர பகுதிகளுக்கு செல்ல ஒரு பஸ் நிலையம் என 2 பேருந்து நிலையங்கள் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. உக்கடத்தில் மேம்பாலம் இந்த மாதம் திறக்கப்பட உள்ள நிலையில் அடுத்தகட்டமாக பேருந்துநிலையம் அமைக்கப்பட உள்ளது குறிப்பித்தக்கது.
-
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications